Published:Updated:

பறக்கவிடப்பட்ட பந்துகள்... ஆஸியை ஓடவிட்ட கோலி, தவான் - தொடரைச் சமன் செய்தது இந்தியா

பறக்கவிடப்பட்ட பந்துகள்... ஆஸியை ஓடவிட்ட கோலி, தவான் - தொடரைச் சமன் செய்தது இந்தியா
பறக்கவிடப்பட்ட பந்துகள்... ஆஸியை ஓடவிட்ட கோலி, தவான் - தொடரைச் சமன் செய்தது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது இந்திய அணி.

BCCI

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி,  மூன்று டி20,  மூன்று ஒருநாள், நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல்டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இரண்டாவது டி20 மழையின் காரணமாக ரத்தானது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச், முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இன்றைய இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளார்.

BCCI

அதன்படி, முதலில் களமிறங்கிய கேப்டன் பிஞ்ச், ஷார்ட் ஜோடி அதிரடியாக விளையாடியது. 68 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். பிஞ்ச் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். இதன்பின் களமிறங்கியவர்களை குர்னல் பாண்டியா கவனித்துக்கொண்டார். ஷார்ட், மேக்ஸ்வெல் எனச்  சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய வீரர்களை வெளியேற்றினார் குர்னல் பாண்டியா. அபாரமாகப் பந்துவீசிய அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்களுக்கு ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷார்ட் 33 ரன்கள் எடுத்தார்.

BCCI

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணியின் இன்னிங்க்ஸை ரோஹித் ஷர்மா-தவான் இணை துவக்கம் கொடுத்தது. பந்துகளை பவுண்டரி நோக்கியும், வானத்தையோக்கியும் விரட்டியடுத்து அதிரடி ஆட்டத்தில் இறங்கியது இந்த இணை. அதிரடியாக ஆடிய இந்த இணையை 5வது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் பிரித்தார். எல்பிடபிள்யூ முறையில் தவான் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலி-ரோஹித் இணை கைகோத்தது.  தொடக்கத்தில் அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மாவை ஜம்பா வெளியேற்றினார். தொடர்ந்து கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, இறுதியில் தினேஷ் கார்த்திக்குடன் கைகோத்த கோலி, அரைசதமடித்தார். அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா. ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வேல், ஜம்பா, அன்ட்ரியூ டை ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். மெயின் ஆஃப்  த மேட்ச் விருது தவானுக்கு வழங்கப்பட்டது.