Published:Updated:

`அணியில் மாற்றமில்லை'  - வெற்றிவாகை சூடுமா இந்தியா? #AusVInd

`அணியில் மாற்றமில்லை'  - வெற்றிவாகை சூடுமா இந்தியா? #AusVInd
`அணியில் மாற்றமில்லை'  - வெற்றிவாகை சூடுமா இந்தியா? #AusVInd

சிட்னி மைதானத்தில் நடக்கும் மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

`அணியில் மாற்றமில்லை'  - வெற்றிவாகை சூடுமா இந்தியா? #AusVInd

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி, இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. முதல் போட்டியில், இந்திய அணி ஃபீல்டிங்கில் சொதப்பியது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. இருப்பினும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். கடந்த போட்டிகளில் செய்த தவறுகள் இந்தப் போட்டியில் திருத்திக்கொண்டால்தான் வெற்றி குறித்து சிந்திக்க முடியும். 

சிட்னியில் நடக்கும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பிஞ்ச், முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இன்றைய இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் வெற்றிபெற்றதால் தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும் என்பதால் ஆட்டம் பரபரப்புடன் இருக்கும். இருப்பினும் முதலிரண்டு ஆட்டங்களிலும் மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் போக்கு மாறியது. இதனால் இன்றைய போட்டியில் மழை வருமா என அச்சத்தில் உள்ளனர்.