Published:Updated:

பெண்கள் டி20 உலகக்கோப்பை - நான்காவது முறையாக மகுடம் சூடிய ஆஸ்திரேலியா!

பெண்கள் டி20 உலகக்கோப்பை - நான்காவது முறையாக மகுடம் சூடிய ஆஸ்திரேலியா!
பெண்கள் டி20 உலகக்கோப்பை - நான்காவது முறையாக மகுடம் சூடிய ஆஸ்திரேலியா!

பெண்கள் உலகக்கோப்பை டி20 தொடரி இங்கிலாந்து அணியை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

பெண்கள் டி20 உலகக்கோப்பை - நான்காவது முறையாக மகுடம் சூடிய ஆஸ்திரேலியா!

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை மகளிர் டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. சர்வதேச டி20 தரவரிசையில் 5வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, லீக் போட்டியில் தொடர் வெற்றிகளைக் குவித்து அரையிறுதிக்கு முன்னேறியது. கோப்பை வெல்லும் என எதிர்பார்த்திருந்த வேளையில், அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதற்கிடையே, இறுதிப்போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்றது. இதில் டாஸில் ஜெயித்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாகத் தொடக்க ஆட்டக்காரர் டேனியல் யாட் 43 ரன்கள் எடுத்தார். 

மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அசுலேக் கார்ட்னர் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். எளிய இலக்கைத் துரத்தியது ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடினர். 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். பௌலிங்கில் கலக்கிய அசுலேக் கார்ட்னரே பேட்டிங்கிலும் கலக்கினார். அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்து வெற்றியடைய வைத்தார். இதன்மூலம் நான்காவது முறையாக உலகக்கோப்பை கையில் ஏந்தி சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.