Published:Updated:

ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு 2வது வெற்றி

ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு 2வது வெற்றி
ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு 2வது வெற்றி
ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு 2வது வெற்றி

ராய்ப்பூர்: ராய்ப்பூரில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 15 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராய்ப்பூரில் நடந்த 39-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் பொறுப்பு கேப்டன் ஆரோன்பிஞ்ச், டெல்லி டேர்டெவில்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக மஹேலா ஜெயவர்த்தனே, ஷேவாக் ஆகியோர் களம் இறங்கினர்.

புனே வாரியர்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயவர்த்தனே 12 ரன்னிலும், ஷேவாக் 28 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த உன்முக்சந்த் 17 ரன்னில் அவுட் ஆனார். 4வது வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும்  அடித்து ஆடினார். அவருடன் இணைந்த பென்ரோரர் 13 ரன்னிலும், கேதர் ஜாதவ் 25 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. டேவிட் வார்னர் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்களுடனும், இர்பான் பதான் ஒரு பந்தில் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். புனே வாரியர்ஸ் அணி தரப்பில் அசோக் திண்டா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே வாரியர்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுத்தது. இதனால் 15 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2வது வெற்றி பெற்றது.

##~~##
ராபின் உத்தப்பா, ஆரோன் பிஞ்ச் தலா 37 ரன்கள் எடுத்தனர். யுவராஜ்சிங் 31 ரன் எடுத்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் இர்பான் பதான், உமேஷ்யாதவ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 9வது ஆட்டத்தில் ஆடிய புனே வாரியர்ஸ் அணிக்கு இது 7வது தோல்வியாகும்.