Published:Updated:

மாற்றமில்லா இந்திய அணி; டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு! #AusVInd

மாற்றமில்லா இந்திய அணி; டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு! #AusVInd
மாற்றமில்லா இந்திய அணி; டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு! #AusVInd

மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச முடிவுசெய்துள்ளது.

மாற்றமில்லா இந்திய அணி; டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு! #AusVInd


Photo: Twitter/BCCI

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி, இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. தொடரை வெல்ல வேண்டுமானால், இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற  வேண்டியது கட்டாயம். கடந்த போட்டியில், இந்திய அணி ஃபீல்டிங்கில் சொதப்பியது. கடந்த போட்டிகளில் செய்த தவறுகள் இந்தப் போட்டியில் திருத்திக்கொண்டால்தான் வெற்றி குறித்து சிந்திக்க முடியும். 

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் காயமடைந்த ஸ்டான்லேக் -க்கு பதிலாக நாதன் கவுல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார். மைதானத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. போட்டியின்போது, அவ்வப்போது மழை பெய்யலாம் என்றும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்குத் தொடங்குகிறது.