Published:Updated:

கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND

கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND

கண் விழியுங்கள். துணைக் கண்டத்திலிருந்து தென் கிழக்கு திசையில் தூரமாகப் பயணம் செய்யுங்கள். மிக நீண்ட பௌண்டரிகளை அளந்து பாருங்கள். பௌன்ஸர்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். இது கிரிக்கெட்டின் வேறு துருவம். வெல்கம் டூ ஆஸ்திரேலியா!

கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND

கண் விழியுங்கள். துணைக் கண்டத்திலிருந்து தென் கிழக்கு திசையில் தூரமாகப் பயணம் செய்யுங்கள். மிக நீண்ட பௌண்டரிகளை அளந்து பாருங்கள். பௌன்ஸர்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். இது கிரிக்கெட்டின் வேறு துருவம். வெல்கம் டூ ஆஸ்திரேலியா!

Published:Updated:
கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND

`இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் என்று வரிசையாகத் தோற்றுக்கொண்டே இருப்பதால், ஆஸ்திரேலியா பலவீனமாக இருக்கிறது'

`கோலி, ரோஹித் இருவரும் தங்கள் வாழ்நாளின் உச்சபட்ச ஃபார்மில் இருக்கிறார்கள்'.

`ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய பேட்டிங்கை எளிதாகச் சுருட்டி விடலாம்'.

`ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றவர்கள் டி-20 தொடரில் இல்லாததால், ஆஸ்திரேலிய பௌலிங் சுமார்தான்'

நேற்றுத் தொடங்கிய ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்பு, இத்தனை எண்ணங்களும் இந்திய ரசிகர்களின் மனதில் தோன்றியிருக்கும். இந்தியாவிடம் ஆஸ்திரேலியா சரணடைந்துவிடும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால்..! தன் வாழ்நாளின் உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் துணை கேப்டன் ரோஹித் 7 ரன்களுக்கு அவுட். சேஸிங் மன்னன் கேப்டன் கோலி 4 ரன்களில் அவுட். இந்த அதிர்ச்சிகள் களைந்த நேரம், சரணடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி 4 ரன்களில் வென்று விட்டது. கண் விழியுங்கள். துணைக் கண்டத்திலிருந்து தென் கிழக்கு திசையில் தூரமாகப் பயணம் செய்யுங்கள். மிக நீண்ட பௌண்டரிகளை அளந்து பாருங்கள். பௌன்ஸர்களை உன்னிப்பாகக் கவனியுங்கள். இது கிரிக்கெட்டின் வேறு துருவம். வெல்கம் டூ ஆஸ்திரேலியா!

கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND

கடைசியாக விளையாடிய 5 டி-20 போட்டிகளில் இந்தியா நான்கில் வெற்றி பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவோ ஒன்றில் மட்டும். அதுவும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக. பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் 140 ரன் எடுப்பதற்கே திண்டாடினார்கள். ஆனால், இந்தியாவுக்கு எதிராக அவ்வளவு சுலபமாக அவர்களால் ரன் சேர்க்க முடிந்தது. காரணம், இந்திய அணியின் சொதப்பல் ஃபீல்டிங் மற்றும் கேள்விக்குறியாக இருக்கும் ஆறாவது பௌலிங் ஆப்ஷன். ஐ.பி.எல் தொடரில் சோபித்த குருனால் பாண்டியாவால், சுழலுக்குக் கொஞ்சமும் ஒத்துழைக்காத ஆஸ்திரேலிய ஆடுகளங்களிலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புவது எவ்வளவு தவறு! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி 2 போட்டிகளிலுமே ரன்களை வாரி வழங்கினார். இப்போது 24 பந்துகளில் 55 ரன்கள்! அவரை நம் ரசிகர்கள்போல் ட்விட்டரில் டிரெண்ட் ஆகும்வரை சாடுவது தவறு. ஆனால், அவரை நம்பிய கோலி - சாஸ்திரி கூட்டணியைக் குறைசொல்லியே ஆகவேண்டும். கலீல் - கிறிஸ் லின், அடிக்கிறார் என்று தெரிந்தும் லென்த்தை மாற்றாமலேயே பந்துவீசியது பெரும் தவறு. கற்றுக்கொள்ளவேண்டும். 

அடுத்து ஃபீல்டிங்... கேப்டன் விராட் என்ன மனநிலையில் ஃபீல்டிங் செய்தார் தெரியவில்லை. கேட்ச் டிராப், மிஸ் ஃபீல்டு எனத் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்தார். கலீல் அகமது அவருக்கு மேல். கையிலேயே விழுந்த மிக எளிதான கேட்சைத் தவறவிட்டார். பும்ரா ஓவரில், மிட் ஆனில் ஒரு பௌண்டரி விட்டார். பொதுவாகவே அவர் ஃபீல்டிங்கில் மெதுவாகவே செயல்படுகிறர். ஓர் இடத்தில் 30 யார்டு சர்க்கிளுக்குள் மெதுவாக ஓடி, கையால் எடுக்கவேண்டிய பந்தைக் காலால் தடுக்கிறார். போதாக்குறைக்கு த்ரோக்களும் எங்கெங்கோ செல்கிறது. கலீல் அகமது ஃபீல்டிங் செய்த விதத்தை கமென்டரியில் இருந்த உத்தப்பாவும் சுட்டிக்காட்டினார். ஆம், உத்தப்பா வர்ணனையாளர் ஆகிட்டார்!

கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND

களத்திலிருந்து கட் செய்து, கேமராவை கமென்டரி பக்கம் திருப்புவோம்...

உத்தப்பா, கம்பீர் என இந்தத் தொடரின் வர்ணனையாளர் குழுவில் நிறைய புதுமுகங்கள். ஆனாலும், அந்த மும்பை வாலாக்களும் தவறாமல் இடம்பிடித்துவிட்டனர். ஒளிபரப்பு உரிமம் பி.சி.சி.ஐ கட்டுப்பாட்டில் இல்லாததால், போக்ளே இஸ் பேக். மழைக்கு நடுவே மைக்கேல் கிளார்க்குடன் பேசிக்கொண்டிருந்தவர் இடியாய் ஒரு விஷயத்தைச் சொன்னார். பிரிஸ்பேன் மைதானத்தில் டெஸ்ட் மேட்ச் இல்லாமல், டி-20  போட்டி நடத்த முடிவு செய்தது தனக்கு ஆச்சர்யமளிப்பதாகத் தெரிவித்தார் போக்ளே. கிளார்க்கும் அதை ஆமோதித்தார். ஏனெனில், 30 ஆண்டுகளாக பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை. இந்த 30 ஆண்டுகளில் ஆடிய 29 டெஸ்ட் போட்டிகளில், 22 வெற்றிகள். அதுமட்டுமல்லாமல், அனைத்து முக்கியமான தொடர்களிலும் ஒரு போட்டியாவது பிரிஸ்பேனில் நடந்துவிடும். இன்னும் குறிப்பாகச் சொன்னால், பல டெஸ்ட் தொடர்கள் பிரிஸ்பேனில்தான் தொடங்கும். அப்படிப்பட்ட மைதானத்தில், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி இல்லை. டி-20 மட்டும்! ``Someone have made a India - centric fixtures" என்றார். இருக்கலாம்!

இப்படிப் பேசித்தான் இந்தியாவில் நடக்கும் தொடர்களுக்கு வர்ணனை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் மனிதர். இருந்தும் இப்படி எதையேனும் சொல்லிவிடுகிறார். ஆனால், இந்த விஷயத்தில் புதுமுகம் உத்தப்பா கொஞ்சம் உஷார். டார்சி ஷார்ட் விக்கெட்டை வீழ்த்தியதும் கலீலைப் புகழ்ந்துகொண்டிருந்தார் உத்தப்பா. அடுத்த பந்தை, களமிறங்கிய வேகத்தில் தன் நைட் ரைடர்ஸ் `டீம் மேட்' கிறிஸ் லின் அற்புதமாக பௌண்டரி அடித்ததும் அவரையும் பாராட்டத் தொடங்கினார். ``என்ன உடனே உங்க டீம் மேட்டுக்காக கட்சி மாறிட்டீங்களா" என்று கிளார்க் உரச, ``ச்சச்ச... அதெல்லாம் இல்ல. என்னோடு முழு ஆதரவும் இந்தியாவுக்குத்தான். அதுல எந்த மாற்றமும் இல்ல" என்று உடனடியாக `டிஸ்க்லெய்மர்' போட்டார் உத்தப்பா. பாவம், இப்போதுதானே அறிமுகம் ஆகியிருக்கிறார். வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமே! சரி, நாம் ஏன் திசை மாறி கிரிக்கெட் சங்க அரசியல் பற்றியெல்லாம் பேசவேண்டும். மீண்டும் காபா பக்கமே செல்வோம். 

கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND

இந்தியாவின் ஃபீல்டிங், பௌலிங் ஆப்ஷன்கள், மழையால் மாற்றப்பட்ட இலக்கு போன்றவற்றை எல்லோரும் குறைசொல்லிவிட்டோம். ஆனால், இந்தியாவின் பேட்டிங்? இருவர் தவிர்த்து, அனைத்து பேட்ஸ்மேன்களுமே தவறு செய்தார்கள். உண்மையில் நாம் கவனிக்கவேண்டியது இந்தியா பேட்டிங்கில் செய்த தவறுகளைத்தாம். அதுதான் இந்தியாவின் தோல்விக்கு மிகமுக்கியக் காரணம்! பெரிதாக ஸ்விங் ஆகாத இந்த மைதானத்தில் 17 ஓவரில், 174 ரன்களை கட்டாயம் எடுத்திருக்கலாம். சரியாகத் திட்டமிட்டிருந்தால் எளிதாக சாத்தியப்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்தியா கோட்டை விட்டுவிட்டது. 

நேற்றைய போட்டி நடந்த காபா மைதானத்தில் ஸ்கொயர் பௌண்டரிகளின் அளவு 69 மீட்டர் மற்றும் 83 மீட்டர். ஸ்டிரெயிட் பௌண்டரிகள் 63 மற்றும் 73 மீட்டர். இந்திய ஆடுகளங்களைவிட அனைத்து ஏரியாக்களிலும் கிட்டத்தட்ட 10 மீட்டர் பெரியது. இருந்தும், சின்னசாமி மைதானத்தில் ஆடுவதைப் போல் ஸ்லாக் ஷாட்கள் மட்டுமே ஆடி, தோல்வியைத் தேடிக்கொண்டுள்ளது இந்தியா. குருனால் பாண்டியா, ரிசப் பன்ட் போன்றவர்கள் கடைசிக் கட்டத்தில் பந்தைப் பார்க்காமல் சுற்றியதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களான கோலி, ரோஹித் கூடவா அப்படி ஆடுவது. அதுவும் மிக முக்கியமான ஒரு தொடரின் முதல் போட்டியில்?

கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND

ஷிகர் தவான், தான் எப்படி ஆடவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். சில எட்ஜ்களில் கேட்சாவதிலிருந்து தப்பித்தாலும், சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆடினார். இந்த ஆடுகளத்தில் எது சிக்ஸராகுமோ, அந்தப் பந்துகளை சரியாக அடித்தார். பலமாகவும் அடித்தார். இந்த ஆட்டத்தில் சரியாக விளையாடிய இன்னொரு இந்திய பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். ரன்ரேட் அதிகரித்து, நெருக்கடியைக் கூட்டிக்கொண்டிருந்தபோதும், சரியான ஷாட்களை ஆடினார். 15-வது ஓவரில் ஸ்டாய்னிஸ் வீசிய ஸ்லோ பாலை, ஃபைன் லெக் திசையில் அவர் அடித்த பௌண்டரி, அடுத்து ஆண்ட்ரே டை ஓவரில், கவர் திசையில் அடித்த பௌண்டரி, அதே ஓவரின் கடைசி பந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்து லாங் ஆன் திசையில் அடித்த பௌண்டரி... இந்த ஆடுகளம், அந்த நேரத்திலிருந்த நெருக்கடி, இந்தியாவின் தேவை என அனைத்தையும் கணக்கிட்டு அடித்தது அற்புதமான ஷாட்கள். உண்மையில், இந்த ஆட்டத்தின் சிறந்த பேட்ஸ்மேனே அவர்தான். 

இந்தக் கணக்கிடல்தான், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களிடம் இல்லை. ஷார்ட் பால்களை, துணைக் கண்டம் போலவே டீல் செய்கிறார் ரோஹித். ஃபைன் லெக்கில் கேட்ச் வாய்ப்பு தவறுகிறது. அடுத்த பந்தே மீண்டும் தூக்கியடித்து வெளியேறுகிறார். இதையெல்லாம் விடக் கொடுமை கோலி அவுட்டான விதம். 9.3-வது ஓவர்... ஸ்டாய்னிஸ் வீசிய ஸ்லோ பௌன்சரை புல் செய்ய முயன்று ஏமாற்றமடைகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த அந்த ஓவரின் கடைசிப் பந்தையும் ஸ்லாக் ஆட முயற்சி செய்து அதில் தோல்வியடைகிறார். அடுத்த ஓவரில், ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சிலும் அதையே முயற்சி செய்து அவுட்டாகி வெளியேறுகிறார். இன்றைய தேதிக்கு, கோலியைவிட சிறந்த Calculative batsman கிடையாது. ஆனால், அவரே கொஞ்சமும் யோசிக்காமல், ஒவ்வொரு பந்தையும் ஸ்லாக் ஆடவே முயற்சி செய்யும்போது, பன்ட், குருனால் பாண்டியா போன்ற இளைஞர்களை என்ன சொல்வது?

கோலி 4, ரோஹித் 7, குருனால் 55... வெல்கம் டூ ஆஸ்திரேலியா! #AUSvIND

இந்த இடம்தான் ஆஸ்திரேலியா, இந்தியாவைக் கொஞ்சம் பின்னுக்குத்தள்ளிவிட்டது. மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் இருவரும் ஜோடி சேர்ந்தபோது ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் 7.38. அந்த ஜோடி பிரியும்போது 9.37! மொத்தமாக ஆட்டத்தை மாற்றியது அந்த ஜோடி. ஆட்டத்தை அவர்கள் கையாண்டவிதம் இந்திய பேட்ஸ்மேன்களுக்குப் பாடம். மேக்ஸ்வெல் கூட தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டவில்லை. கிறிஸ் லின் போல் எல்லாப் பந்துகளையும் பௌண்டரி அடிக்க நினைக்கவில்லை. முதலில் நிதானமாக ஸ்டிரைக் ரொடேட் செய்தனர். பெரிய மைதானமாக இருந்ததால், சரியான இடைவெளி பார்த்து, நிறைய டபுள் எடுத்தனர். கொஞ்சம் ரன்ரேட் நிமிர்ந்ததும் குருனால், கலீல் இருவரை மட்டும் டார்கெட் செய்தனர். குல்தீப் பந்துவீச வந்தபோது அமைதி காத்தனர். தவறான ஷாட்கள் ஆடவில்லை. அந்த இரண்டு பௌலர்களை மட்டும் குறிவைத்து சிக்ஸர்கள் பறக்கவிட்டதும், தொடர்ச்சியாக டபுள்கள் எடுத்ததும் நல்ல ஸ்கோர் எடுக்கவைத்துவிட்டது. 

இந்திய பேட்ஸ்மேன்கள் அதைச் செய்யவேயில்லை. பன்ட், கோலி, ரோஹித் போன்றவர்கள் பௌண்டரி அடிப்பதில் ஆர்வம் காட்டியதில் டபுள்கள் எதுவுமே கிடைக்கவில்லை. சரியாகப் பந்து சிக்காததால் பௌண்டரிகளும் குறைந்தது. போதாக்குறைக்கு, கோலி - நேற்று நன்றாகப் பந்துவீசிக்கொண்டிருந்த ஜாம்வாவைக் குறிவைத்துக் காலியானார். கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், டை - ஸ்டாய்னிஸ் கூட்டணியின் டெத் ஓவர்களை ஒரு கை பார்த்திருக்கலாம். முடியாமல் போய்விட்டது. இந்தியா தோற்றுவிட்டது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூட நிறைய தவறுகள் செய்தார். 17 ஓவர் ஆட்டத்தில் 2 பௌலர்கள்தான் 4 ஓவர் போட முடியும் என்பதை மனதில் கொள்ளாமல், தொடக்கத்திலேயே பெரண்டார்ஃபுக்கு 4 ஓவர்கள் கொடுத்து முடித்தார். ஜாம்பா 4 ஓவர்கள் பந்துவீசியதை மறந்து, ஸ்டேன்லேக்கை நான்காவது ஓவர் வீச அழைத்தார். இப்படி ஐடியாவே இல்லாமல் பௌலிங் கொடுத்துக்கொண்டிருந்த அணியிடம்தான், இந்தியா வீழ்ந்துள்ளது! ஆஸ்திரேலியாவில் தடம் பதிக்க நட்சத்திரப் பட்டாளம் போதாது. திட்டமிடல் வேண்டும்! ஸ்மித், வார்னர், ஸ்டார்க் இல்லாவிட்டாலும், ஆஸ்திரேலியா போராடும், ஏனெனில், மோதும் களம் ஆஸ்திரேலியா!