Published:Updated:

ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை

ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை
ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை
ஐ.பி.எல்: பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை

மும்பை : மும்பையில் நடந்த ஐ.பி.எல்.போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 37வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் ஸ்மித், சச்சின் களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.

ரவிராம்பால் பந்து வீச்சில் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் விரட்டிய சச்சின் 13 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்திருந்த போது ஆர்.பி.சிங் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதனை அடுத்து தினேஷ் கார்த்திக் களம் இறங்கினார். அடித்து ஆடிய வெய்ன் ஸ்மித் 35 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். சையது முகமது வீசிய அடுத்த பந்திலேயே சுமித் (50) போல்டு ஆனார். பின்னர் வந்த கேப்டன் ரோகித் ஷர்மா (10) ரன் அவுட் ஆனார்.

##~~##
இதைத்தொடர்ந்து பொல்லார்ட், தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அவ்வப்போது அதிரடி காட்டியது. ரோகித் ஷர்மா ரன் அவுட்டுக்கு காரணமாக இருந்த தினேஷ்கார்த்திக்கும் (43) 18வது ஓவரில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து அம்பத்தி ராயுடு வந்த வேகத்தில் ரன் அவுட் ஆனார். அதே ஓவரில் பொல்லார்ட்டும் (34) நடையை கட்டினார். ஹர்பஜன்சிங் 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்தது.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 58 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியில் பந்துவீச்சாளர் வினைய் குமார் 26 ரன்கள் எடுத்தார். அதிரடி மன்னன் கெய்ல் 18 ரன்னில் வீழ்ந்தார். தில்சான் (13), கேப்டன் கோலி (1), டி வில்லியர்ஸ் (2), திவாரி (21), ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டம்  இழந்தனர்.
ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 5வது வெற்றியாகும். அதே நேரத்தில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணிக்கு இது 3வது தோல்வியாகும்.