Published:Updated:

ஐ.பி.எல்: வாட்சன் அதிரடியில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்

ஐ.பி.எல்: வாட்சன் அதிரடியில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்
ஐ.பி.எல்: வாட்சன் அதிரடியில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்
ஐ.பி.எல்: வாட்சன் அதிரடியில் வீழ்ந்தது சன் ரைசர்ஸ்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் ஷேன் வாட்சன் அதிரடியில் ஹைதராபாத் சரன் ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தி்ல் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 36வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மாலை மோதின. டாஸ் வென்று முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர் அக் ஷாத் ரெட்டி (2), கேப்டன் சங்கக்கரா (4), ஷிகர் தவான் (0), கரண்ஷர்மா (6 ரன்), திசரா பெரேரா (4), விஹாரி (4 ) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 29 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் அணி தவித்தது.

7வது வீரராக களம் இறங்கிய டேரன் சமி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.  41 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் பவுல்க்னெர் பந்தில் சமி ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

ஸ்டெயின் 8 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்னும், இஷாந்த் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஜேம்ஸ் பவுல்க்னெர் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே 1 ரன்னிலும், கேப்டன் டிராவிட் 36 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கடந்த ஆட்டத்தை போல் அதிரடியாக விளையாடிய ஷேன் வாட்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

##~~##
17.5 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 98 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 10 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் வீரர் ஜேம்ஸ் பவுல்க்னெர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
8வது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்ற 5வது வெற்றி இதுவாகும். 9-வது ஆட்டத்தில் விளையாடிய ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி சந்தித்த 4வது தோல்வி இது.