Published:Updated:

உங்களுக்குப் பிடித்த கேப்டன் யார்?- யோசிக்காமல் கங்குலி அளித்த பதில்

உங்களுக்குப் பிடித்த கேப்டன் யார்?- யோசிக்காமல் கங்குலி அளித்த பதில்
உங்களுக்குப் பிடித்த கேப்டன் யார்?- யோசிக்காமல் கங்குலி அளித்த பதில்

24-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, நவம்பர் 17-ம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவை அடுத்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி,  சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தார். இதில், ஜார்ஜியா திரைப்பட இயக்குநர் ஜார்ஜ் ஓவாஷில்லி, நடிகை மரியம், இயக்குநர் சுதிர் மிஷ்ரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜாஃப்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். கங்குலியைச் சந்தித்த திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றனர். 


ஆஸ்திரேலியா, இந்தியா இடையேயான கிரிக்கெட் போட்டிகளை நினைவுபடுத்தினார்  இயக்குநர் ஜாஃப்ரி. ”உங்களுக்குப் பிடித்த எதிரணி  கேப்டன் யார்?” என்று  தாதாவைக் கேட்க, `ஸ்டீவ் வாக்’ என யோசிக்காமல்  பதில் அளித்தார் கங்குலி. அதுமட்டுமில்லாமல், கிரிக்கெட் அணி கேப்டன் பணிகள்குறித்தும் கமென்ட் கொடுத்தார்.  “அணி வீரர்களுக்கு நம்பிக்கைகொடுப்பதே ஒரு சிறந்த கேப்டனின் கடமை” என்றார். 

2001 இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான  டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ரசிகர்கள்  மறந்துவிட முடியாது.  ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸியும் , கங்குலி தலைமையிலான இந்தியாவும், தொடரை வெல்ல மோதிக்கொண்டன. தொடர் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் சரண்டரானது.  இந்திய மண்ணில் ஜெயித்துக்காட்டுவோம் என இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்குத் தண்ணி காட்டியது கங்குலி அண்ட் கோ. கேப்டன்ஷிப் காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக மோதிக்கொண்ட ஸ்டீவை, ‘ஃபேவரைட் கேப்டன்’ எனக்  கூறியதுதான் தாதாவின் ஸ்பெஷல்.