Published:Updated:

மோதல்... நட்பு..! - கோலி குறித்து மனம்திறந்த ஸ்டார்க்!

மோதல்... நட்பு..! - கோலி குறித்து மனம்திறந்த ஸ்டார்க்!
மோதல்... நட்பு..! - கோலி குறித்து மனம்திறந்த ஸ்டார்க்!

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க், கோலி குறித்தும் அவருடனான மோதல், நட்பு குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

• ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. நாளை, முதலாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில், வீரர்கள் பலர் இந்தத் தொடர் தொடர்பாக தங்களது கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.
 
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் தொடர் என்றாலே, இருநாட்டு வீரர்களுக்குக்கிடையே நடக்கும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளும் போட்டிகள் தாண்டிப் பேசப்படும். கடந்த காலத் தொடர்களில் பல உதாரணங்களைச் சொல்லலாம். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் மிட்செல் ஜான்சன் கோலியுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார். ஸ்மித்தின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கோலி, சில ஆஸ்திரேலிய வீரர்களுடன் தான் நட்பு வைத்துக்கொள்ள விரும்புவதே கிடையாது என வெளிப்படையாகவே தெரிவித்தார்.

மோதல்... நட்பு..! - கோலி குறித்து மனம்திறந்த ஸ்டார்க்!

இந்நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஸ்டார்க், கோலி குறித்தும் அவருடனான மோதல் குறித்தும் பேசியுள்ளார். ஸ்டார்க், ``கோலி மீது எந்த விரக்தியும் கிடையாது. அவருடனான உறவு மோசமாகிவிட்டதாகக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. களத்தில் மோதல் இருப்பது சகஜம்தான். ஆனால், அது களத்தில் மட்டும்தான். தொடர் முடிந்த பின்னர் பலமுறை கோலியுடன் சிரித்துப் பேசியிருக்கிறேன். 

ஐபிஎல் தொடரில் கோலியுடன் இணைந்து விளையாடியிருக்கிறேன். அதனால், அவரை களத்துக்கு வெளியேயும் நான் அறிவேன். என் சக நாட்டு வீரர்களைவிட கோலியை நான் அதிகம் அறிவேன். கோலி சவாலை விரும்பும் மனிதர். களத்துக்கு வெளியே அவர் முற்றிலும் மாறுபட்ட மனிதர். தனது அணியின் அனைத்து வீரர்களுடனும் கலந்திருக்க விரும்புவார். ஆனால், களத்தில் எல்லா நேரத்திலும் அப்படி இருக்க முடியாது. நாட்டுக்காக விளையாடும்போது ஆக்ரோஷமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது” என்றார்.