Published:Updated:

உள்ளூரில் எந்த அணியும் `வீக்’ கிடையாது! - ரவி சாஸ்திரி #AUSvIND

உள்ளூரில் எந்த அணியும் `வீக்’ கிடையாது! - ரவி சாஸ்திரி #AUSvIND
உள்ளூரில் எந்த அணியும் `வீக்’ கிடையாது! - ரவி சாஸ்திரி #AUSvIND

'உள்ளூரில் எந்த ஒரு அணியும் வலிமைகுன்றிய அணி கிடையாது' என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார். 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி, வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஸ்டீவன் ஸ்மித், வார்னர் மற்றும் பேன்கிராஃப்ட் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி வீரர்கள் இல்லாமல் தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் விளையாடிய தொடர்களை இழந்தது ஏமாற்றமளிக்கிறது. 

ஆஸ்திரேலியத் தொடருக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், ``எந்த ஒரு அணியும் உள்ளூரில் வலிமைகுன்றிய அணியாக இருக்காது. ஆஸ்திரேலிய அணியை, அதன் சொந்த மண்ணில் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவில் விளையாட  ஓர் அணி வரும்போது, நமது அணியில் 3 அல்லது 4 வீரர்கள் விளையாடாமல் இருப்பதுண்டு. அப்போது, இந்திய அணியை வலிமைகுன்றிய அணியாகக் கருத முடியுமா?
இந்திய அணி, தனது கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடர்களைக் கவனித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். அந்தத் தொடர்களின் சில போட்டிகளில், இந்திய அணி மிகக் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்தத் தோல்விகள், தொடரை இழக்கும் நிலைக்குக் கொண்டுசென்றன. அந்தத் தோல்விகளில் இருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு, அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்’’ என்றார்.