Published:Updated:

``15 ஓவர்கள் தான்!” -முகமது ஷமிக்கு பி.சி.சி.ஐ விதித்த கட்டுப்பாடு

``15 ஓவர்கள் தான்!” -முகமது ஷமிக்கு பி.சி.சி.ஐ விதித்த கட்டுப்பாடு
``15 ஓவர்கள் தான்!” -முகமது ஷமிக்கு பி.சி.சி.ஐ விதித்த கட்டுப்பாடு

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசி வரும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. 


இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர். இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா  மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகள் சாய்த்தார். தென்னாப்பிரிக்காவில் 15 விக்கெட்டுகளும், இங்கிலாந்தில் 14 விக்கெட்டுகள் இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 விக்கெட்டும் எடுத்துச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். 

ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பரில் தொடங்கும் டெஸ்ட் தொடரிலும் இவர் முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். தற்போது இவர் ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்து ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் அனைவரும் ஃபிட்டாக இருப்பதில் பி.சி.சி.ஐ மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் உறுதியுடன் உள்ளனர். 

இந்நிலையில் பி.சி.சி.ஐ பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி, ஷமி  நடைபெற்றுக்கொண்டிருக்கும்  ரஞ்சி தொடரில் ஒரு இன்னிங்சில் 15 ஓவர்கள் வீசினால் போதும்.  தேவைப்பட்டால் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் கூடுதலாக வீச அனுமதிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஷமியின் ஃபிட்னெஸ் குறித்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்யும் படியும் பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாகப் பேசிய பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரி,  ``இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முழு உடற்தகுதியுடன் இருப்பது அவசியமானது. பி.சி.சி.ஐ யின் கோரிக்கையை நாங்கள் மதிக்கிறோம். ஷமி அதிக ஓவர்கள் வீச வேண்டிய நிலை வராது. எங்களின் பவுலிங் திறமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.