Published:Updated:

பரபரப்பான கட்டத்தில் சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

பரபரப்பான கட்டத்தில் சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்
பரபரப்பான கட்டத்தில் சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்
பரபரப்பான கட்டத்தில் சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

ஜெய்ப்பூரில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. ஐ.பி.எல் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கூடுதல் புள்ளிகளை பெற்று முன்னணியில் செல்ல ஹைதராபாத் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. ஐ.பி.எல் தர வரிசையில் 4வது இடத்தில் இருக்கிறது. வெற்றி பெற்றால் மட்டுமே தர வரிசையில் முன்னேற முடியும் என்பதால் இந்த போட்டியை அதிக கவனமுடன் எதிர் கொள்கிறது.

ராஜஸ்தான் ரசிகர்களின் ஊக்கம் வெற்றிபெற கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் என ராஜஸ்தான் அணி எதிர்பார்க்கிறது.

##~~##
இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடக்கும் மற்றொரு போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
பெங்களூர் அணி நல்ல பார்மில் இருப்பதால் இந்த ஆட்டத்தை எளிதாக வெற்றிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணி தர வரிசையில் 6வது இடத்தில் இருப்பதால் முன்னணிக்கு செல்ல போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொந்த மண்ணில் மண்ணை கவ்வாமல் இருக்க மும்பை அணியின் ஆட்டம் சிறப்பாக இருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது.