Published:Updated:

ஐ.பி.எல்: கொல்கத்தாவுக்கு 3வது வெற்றி

ஐ.பி.எல்: கொல்கத்தாவுக்கு 3வது வெற்றி
ஐ.பி.எல்: கொல்கத்தாவுக்கு 3வது வெற்றி
ஐ.பி.எல்: கொல்கத்தாவுக்கு 3வது வெற்றி

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

கொல்கத்தாவில் நேற்றிரவு நடந்த 35வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கில்கிறிஸ்ட், மன்தீப்சிங் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். 25 ரன் எடுத்திருந்த குர்கீரத்சிங், காலிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கில்கிறிஸ்டும் (27) வெளியேறினார்.

அடுத்து, மனன்வோரா 31 ரன்னிலும்,  டேவிட் மில்லர் 10 ரன்னிலும், டேவிட் ஹஸ்ஸி 21 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. குர்கீரத்சிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 28 ரன்னும், பியுஷ்சாவ்லா 2 பந்தில் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் ஆடிய கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் 8 ரன்னிலும், யூசுப் பதான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் வந்த காலிஸ் நன்றாக விளையாடி 37 ரன் எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு இயான்மோர்கான், மன்விந்தர் பிஸ்லாவுடன் ஜோடி சேர்ந்தார்.

##~~##
இந்த ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற நிலையில் இயான்மோர்கான் 42 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் 18.2 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மன்விந்தர் பிஸ்லா 51 ரன்னிலும், செனநாயகே 1 பந்தில் ரன் எதுவும் எடுக்காமலும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
8வது ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தா அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும். 8வது ஆட்டத்தில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது 4வது தோல்வியாகும்.