Published:Updated:

`போட்டிபோட நான் வரவில்லை!’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்

`போட்டிபோட நான் வரவில்லை!’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்
`போட்டிபோட நான் வரவில்லை!’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்

ரிஷப் பன்ட் - இங்கிலாந்து தொடருக்குப் பின் கடந்த சில மாதங்களாக, அடிக்கடி செய்திகளில் காணப்படும் பெயர். தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரேஸில் இருந்த சாஹா, தினேஷ் கார்த்திக் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பவர். கீப்பிங் மட்டுமன்றி பேட்டிங்கிலும் மற்ற அணிகளைப் பந்தாடுகிறார் இந்த பன்ட்.

`போட்டிபோட நான் வரவில்லை!’ - தோனியுடனான ஒப்பீடு குறித்து ரிஷப் பன்ட்

இதனால், தோனியோடன் ஒப்பிட்டு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் ``நான் இங்கு யாரோடும் போட்டி போடுவதற்கு வரவில்லை, எனக்கு வரும் வாய்ப்புகளெல்லாம் என்னை செறிவுபடுத்துவதற்காக மட்டுமேயன்றி, பிறரோடு ஒப்பிடுவதற்கு அல்ல. தோனியை முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு செயல்படுகிறேன்’’ என்றார்.

இங்கிலாந்து தொடருக்கு முன் வெறும் வரையறுக்கப்பட்ட ஓவர்களுக்கு மட்டுமேயான விக்கெட் கீப்பர் என்ற பெயரில்தான் இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்த பின் ஒரு பேட்டியில், ``டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என் நீண்டநாள் ஆசை, என் சிறு வயது பயிற்சியாளர், `நீ டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் மட்டுமே நீ சர்வதேச வீரர்’ என்று அடிக்கடி கூறுவார், இந்த வாய்ப்பால் அது நிறைவேறியுள்ளது’’ என்று பன்ட் கூறினார். டெஸ்ட் போட்டிகளில் தன் அறிமுகப் போட்டிகளின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த வெகு சில வீரர்களில் பன்ட்டும் ஒருவர். தனது மூன்றாவது போட்டியிலேயே சதத்தைப் பதிவு செய்தார். ``இங்கிலாந்து மண்ணில் இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான் என் வாழ்வின் முக்கியமானது’’ என்று கூறினார்.