Published:Updated:

பாரத் மேட்ரிமோனி விளம்பரத் தூதராகத் தோனி ஒப்பந்தம்!

பாரத் மேட்ரிமோனி விளம்பரத் தூதராகத் தோனி ஒப்பந்தம்!
பாரத் மேட்ரிமோனி விளம்பரத் தூதராகத் தோனி ஒப்பந்தம்!

திருமண ஏற்பாடு இணையதளமான ‘பாரத் மேட்ரிமோனி’ டாட்.காமின் விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 



சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம், திருமண வரன் தகவல்கள் அளிப்பதில் முன்னிலையில் உள்ளது. தற்போது, பாரத் மேட்ரிமோனியல் விளம்பரத் தூதராகத் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. “இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன், அன்பான கணவர், பொறுப்பான தந்தை என அனைவருக்கும் பிரியமான எம்.எஸ்.டி, பாரத் மேட்ரிமோனியின் விளம்பரத்தூதராக இணைவது பெருமையாக உள்ளது” என்று அந்நிறுவனத் தலைவர் முருகவேல் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை உறுதி செய்த தோனி, “கடந்த 18 வருடங்களாகத் திருமண ஏற்பாடு சேவைகளில் முன்னணியில் உள்ள பாரத் மேட்ரிமோனியுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஸ்நிக்கர்ஸ், ஓரியண்ட் ஃபேன்ஸ், லாவா மொபைல்ஸ், ரீபுக், பெப்ஸி, பூஸ்ட், டிவிஎஸ், சொனாடா எனப் பல விளம்பரப் படங்களில் எம்.எஸ்.டி இடம் பெற்றுள்ளார்.  விரைவில், எம்.எஸ்.டி இடம் பெரும் பாரத் மேட்ரிமோனி விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.