Published:Updated:

`சென்னையில் 2 தமிழக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!’ - பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI

சென்னையில் நடைபெறும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

`சென்னையில் 2 தமிழக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!’ - பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI

Photo Credit: BCCI

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது போட்டில் 71 வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி-20 போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது

ரசிகர்கள் மாலை முதலே மைதானத்தில் குவிந்தனர். எனினும் தங்களின் தல தோனி இல்லாதது பெரும் வருத்தமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இன்றைய போட்டி சென்னை ரசிகர்களின் ஆரவாரத்துக்கு நடுவில் டாஸ் போட வந்தனர் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வொய்ட்டும். இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்திய அணியில் பும்ரா மற்றும் குல்தீப் யாதவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஹால் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.