Published:Updated:

40 வது வயதில் அடியெடுத்து வைத்தார் சச்சின்!

40 வது வயதில் அடியெடுத்து வைத்தார் சச்சின்!
40 வது வயதில் அடியெடுத்து வைத்தார் சச்சின்!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு இன்று 40வது பிறந்தநாளாகும். இதையொட்டி அவருக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

40 வது வயதில் அடியெடுத்து வைத்தார் சச்சின்!

இந்தியாவின் "லிட்டில் மாஸ்டர்" என்று அழைக்கப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார்.

1989ஆம் ஆண்டு தனது 16வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த சச்சின், 24 ஆண்டுகளாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

அண்மையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய சச்சின், டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தார்.

ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன் அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். இதை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களும், முக்கிய பிரமுகர்களும்  பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

##~~##
இது மட்டும் அல்லாமல், பல்வேறு அமைப்புகளும் சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றன.
198 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள சச்சின், 15,837 ரன்கள் அடித்துள்ளார். இதில் 51 சதமும், 67 அரை சதமும் அடக்கம். அதிகபட்சமாக 248 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 53.86 வைத்துள்ளார் சச்சின்.
463 ஒரு நாள் கிரி்க்கெட் போட்டியில் விளையாடியுள்ள சச்சின், 18,426 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 49 சதமும், 96 அரை சதமும் அடக்கம். அதிகபட்சமாக 200 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். சராசரி 44.83 வைத்துள்ளார்.