Published:Updated:

ஐபிஎல்: கெய்லில் சரவெடியில் சிதைந்தது புனே வாரியர்ஸ்

ஐபிஎல்: கெய்லில் சரவெடியில் சிதைந்தது புனே வாரியர்ஸ்
ஐபிஎல்: கெய்லில் சரவெடியில் சிதைந்தது புனே வாரியர்ஸ்
ஐபிஎல்: கெய்லில் சரவெடியில் சிதைந்தது புனே வாரியர்ஸ்

பெங்களூர்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் கெய்லின் சரவெடியில், புனே வாரியர்ஸ் அணி சிதைந்தது. 133 ரன்னுக்கு சுருண்ட புனே அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த 31வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், புனே வாரியர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் இன்னிங்சை கிறிஸ் கெய்லும், தில்சானும் தொடங்கினர். 1.2 ஓவரில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் 40 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டன.

ஒருபக்கம் மழை சாரல் ஓய்ந்ததும், கெய்லின் சிக்சர் மழை ஆரம்பமானது. அந்த ஓவரில் எஞ்சிய 4 பந்துகளில் 3 பவுண்டரிகளை ஓட விட்டார். தொடர்ந்து கெய்ல் அசுரத்தனமாக பேட்டை வெளிப்படுத்தினார்.  கெயிலின் ஆட்டம் உள்ளூர் ரசிகர்களுக்கு வாணவேடிக்கையாக அமைந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்த கெயல், 30 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக சதம் அடித்தவர் என்ற புதிய உலக சாதனையையும் நிகழ்த்தினார். கெயிலை கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நின்றனர் புனே வாரியர்ஸ் பவுலர்கள்.

மறுமுனையில் நிதானமாக ஆடிய தில்சான் 33 ரன்களில் ஆட்டம் இழந்தார். கெய்ல் - தில்சான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். தொடக்க ஜோடி பிரிந்தாலும், கெய்லின் கதகளி மட்டும் நின்றபாடில்லை. 15.5 ஓவர்களில் 200 ரன்களை தாண்டியது பெங்களூர் அணி. இதன் பிறகு கேப்டன் விராட் கோலி (11) ரன் அவுட் ஆனார். அடுத்து, கெய்லுடன், டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். டிவில்லியர்சும் பட்டையை கிளப்பினார். இதனால் பெங்களுர் அணி 250 ரன்களையும் எளிதில் கடந்தது. 8 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 31 ரன்கள் விளாசிய டிவில்லியர்ஸ் மிட்செல் மார்ஷ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

##~~##
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல். மட்டுமின்றி, 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது தான். கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். இதில் 13 பவுண்டரி, 17 சிக்சர்கள் அடக்கம்.
பின்னர் இலக்கை நோக்கி புனே வாரியர்ஸ் அணி விளையாடியது.  20 ஓவர்களை முழுமையாக ஆடிய அந்த அணியால் 9 விக்கெட்டுக்கு 133 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 130 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.
புனே அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் சுமித் 41 ரன்களும், யுவராஜ்சிங் 16 ரன்களும் எடுத்தனர். பேட்டிங்கில் மிரட்டிய கிறிஸ் கெய்ல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
8வது லீக்கில் ஆடிய பெங்களூர் அணிக்கு இது 6வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம் 8வது ஆட்டத்தில் விளையாடிய புனே அணிக்கு இது 6வது தோல்வியாகும்.