Published:Updated:

` விராட் கோலிக்கு சோயப் அக்தர் கொடுத்த சவால்!

` விராட் கோலிக்கு சோயப் அக்தர் கொடுத்த சவால்!
` விராட் கோலிக்கு சோயப் அக்தர் கொடுத்த சவால்!

'விராட் கோலி தான் சொல்லும் சாதனையைச் செய்ய வேண்டும்' எனக் கூறி, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் டாஸ்க் ஒன்றை விதித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இந்த வருடம் உச்சக்கட்ட பார்மில் இருக்கிறார். விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சாதனைகளாக படைத்துத் தான் ஒரு ரன் மெஷின் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறார். இந்த வருடத்தில் ஏற்கெனவே 1000 ரன்களைக் கடந்து 2000 ரன்களை நோக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார். தற்போது நடந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார்.

அந்த வகையில் இந்தத் தொடரின்போது, ஒரு நாள் போட்டியில் விரைவாக 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியதுடன், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஹாட்ரிக் சதம் கண்டு அசத்தினார். இதன்மூலம், ஒரு தொடரில் ஹாட்ரிக் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். 

இதற்கிடையே, விராட் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என வாழ்த்தியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், புதிய டாஸ்க் ஒன்றையும் கோலிக்கு விடுத்துள்ளார். அதாவது, கோலி 120 செஞ்சுரிகளை விளாச வேண்டும் எனவும் வித்தியாசமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், ``என்ன மனிதர் இவர். விளையாடிய மூன்று போட்டிகளிலும் சதம் அடித்த ஒரே இந்தியர். கோலி நிஜமாகவே ரன் மெஷின் தான். விரைவில் அவர் 120 சதங்களைக் கடக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.