Published:Updated:

கோலி ஹாட்ரிக் சதம்; இந்தியாவின் தொடர் வெற்றிக்கு ரெஸ்ட் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி!

கோலி ஹாட்ரிக் சதம்; இந்தியாவின் தொடர் வெற்றிக்கு ரெஸ்ட் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி!
கோலி ஹாட்ரிக் சதம்; இந்தியாவின் தொடர் வெற்றிக்கு ரெஸ்ட் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி!

இந்தியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

கோலி ஹாட்ரிக் சதம்; இந்தியாவின் தொடர் வெற்றிக்கு ரெஸ்ட் கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி!

photo credit:@icc

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கீரண் பவெல் மற்றும் சந்திரபால் ஹெம்ராஜ் இணை துவக்கம் கொடுத்தது. இவர்கள் விரைவாக வெளியேற, ஹோப் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் நிலைத்து ஆடினார். மற்றவர்கள் சொற்ப ரன்களிலே வெளியேறினர். ஹோப் 113 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்டிய நர்ஸ் 22 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இவர்களின் உதவியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 283 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். 

எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்குத் துவக்கமே அதிர்ச்சி தந்தது. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா இந்த முறை சொதப்பினார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஓரளவுக்கு விளையாடினார். தவான் 35 ரன்களுக்கு வெளியேறினார். இதற்கிடையே, உச்சக்கட்ட பார்மில் இருக்கும் கேப்டன் விராட் கோலி இன்றும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்த தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒரு நாள் தொடரில் ஹாட்ரிக் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டிச் சென்றார். ஒரு முனையில் கோலி நன்றாக விளையாடினாலும், மறு முனையில் அவருக்குச் சரியான பாட்னர்ஷிப் கொடுக்க யாருமில்லை. பான்ட், தோனி என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால்  47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது இந்தியா. இதன்மூலம் ஒருநாள் தொடர் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளது. இதன்மூலம், ஒருநாள் போட்டி தொடரில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்.