Published:Updated:

மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா! - டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு #INDVWI

மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா! - டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு #INDVWI
மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா! - டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு #INDVWI

புனே மைதானத்தில் இன்று நடைபெறும் 3 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். 

மூன்று மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா! - டாஸ் வென்ற கோலி பந்துவீச முடிவு #INDVWI

இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டையில் முடிந்தது. தற்போது இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் மூன்றாவது போட்டி புனே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், கலீல் அகமது மற்றும் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் சுழற்பந்துவீச்சைக் கவனித்துக் கொள்வார்கள். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரும் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய இருந்ததாக தெரிவித்தார். போட்டி நடக்கும் புனே மைதானம் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரத்தில் பேட்டிங் செய்ய சாதகமான சூழல் நிலவும் என நம்புவதாக இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.