Published:Updated:

`நாங்க வரவச்சோம்’ - புவனேஷ்வர், பும்ரா அணிக்குத் திரும்பியது குறித்து வெ.இ கோச்

`நாங்க வரவச்சோம்’ - புவனேஷ்வர், பும்ரா அணிக்குத் திரும்பியது குறித்து வெ.இ கோச்
`நாங்க வரவச்சோம்’ - புவனேஷ்வர், பும்ரா அணிக்குத் திரும்பியது குறித்து வெ.இ கோச்

புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா இந்திய அணிக்குத் திரும்பியுள்ளது குறித்து வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரில் இந்திய அணிக்குச் சவால் அளித்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற, இரண்டாவது போட்டி `டை’யில் முடிந்தது. கடைசிப் பந்து வரை போராடி டை செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தியது. 

இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 320 ரன்களுக்கு மேல் குவித்தது. இந்திய அணியும் 320 ரன்களுக்கு மேல் குவித்தாலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவமில்லா பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக 320 ரன்களுக்கு மேல் குவித்தது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகத்தான் இருந்தது. இந்திய அணியின் முக்கிய வேகப் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் அவர்கள் இருவரும் கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்குச் தேர்வு செய்யப்பட்டனர். இன்று புனேவில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் நேற்று மாலை புனேவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா. அப்போது அவரிடம் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``அவர்கள் இருவரும் அனுபவப் பந்துவீச்சாளர்கள். எங்கள் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்தினால்தான் அவர்கள் அணிக்குத் திரும்பியுள்ளனர். இது வெ.இ அணிக்கு நல்ல விஷயம்தான்” என்றார் பெருமிதத்துடன்.