Published:Updated:

முடிவுக்கு வருகிறதா தோனியின் டி20 வாழ்க்கை? -தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத்தின் பதில் #Dhoni

முடிவுக்கு வருகிறதா தோனியின் டி20 வாழ்க்கை? -தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத்தின் பதில்  #Dhoni
முடிவுக்கு வருகிறதா தோனியின் டி20 வாழ்க்கை? -தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத்தின் பதில் #Dhoni

மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் தோனி பெயர் இடம் பெறவில்லை. 

இந்திய அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்ததும், டி20 தொடர் ஆரம்பமாகிறது. அதன் பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.
 
இதில், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இரண்டு டி20 தொடர்களிலும் இடம் பெறவில்லை. விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் கோலிக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரோகித் ஷர்மா அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரு டி20 தொடர்களிலும் தோனி தேர்வாகாததால், தோனி ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மேற்கு இந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் தொடருக்குப் பின்னர் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. அதுவரை அவர் ஓய்வில்தான் இருப்பார். உள்ளூரில் நடைபெறும் விஜய் ஹசாரே மற்றும் தியோதர் கோப்பை தொடர்களும் ஏற்கெனவே முடிந்து விட்டதால் அவர் உள்ளூர் போட்டியிலும் விளையாட வாய்ப்பில்லை. அடுத்த 6 மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகள் தவிர்த்து, நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே டி20 போட்டியில் விளையாடவுள்ளது இந்திய அணி. இதனால், தோனி டி20 போட்டிகளில் புறக்கணிக்கப்படுகிறாரா என்ற கேள்வியும் தோனி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

இந்நிலையில் அணி தேர்வு குறித்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இந்திய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்,  ``இரண்டாவது விக்கெட் கீப்பரை தீர்மானிக்கும் பொருட்டுதான் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது” என்றார். தோனியின் சர்வதேச டி20 வாழ்க்கை முடிவுக்கு வந்ததா என்ற கேள்விக்கு,  ``நிச்சயமாக இல்லை” என்று மறுத்தார். இரண்டாம் விக்கெட் கீப்பர் தேர்வுக்காக மட்டுமே அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது என்று உறுதியுடன் தெரிவித்தார்.