Published:Updated:

‘தோனி இல்லாத இந்திய அணி’- டி20 போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

‘தோனி இல்லாத இந்திய அணி’- டி20 போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
‘தோனி இல்லாத இந்திய அணி’- டி20 போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.  இதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி-20 போட்டி, மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்கும் இந்திய அணி குறித்த அறிவிப்பை  பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் தோனியின் பெயர் இல்லை.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மா அணியை வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் விவரம்: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், க்ருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார்,பும்ரா, கலீல் அஹமது, உமேஷ் யாதவ், நதீம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், குப்தீப் யாதவ், சாஹல், வாஷிங்டன் சுந்தர், க்ருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார்,பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அஹமது.