Published:Updated:

டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே

டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே
டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே
டெஸ்ட் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே

ஹராரே: ஹராரேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வங்க தேச அணியை 335 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வீழ்த்தி மற்ற அணிக்கு சவால் விடுத்துள்ளது.

டாஸில் தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 65 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் வந்த டெய்லர் அபாரமாக விளையாடி 171 ரன் குவித்தார். வாலர் 55 ரன்னும், கிரிமீர் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.

முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 389 ரன்கள் குவித்தது. வங்க தேசம் தரப்பில் இஸ்லாம், இனாமுல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உஷேன், ஹாசி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்க தேசம் அணி, ஜிம்பாப்வே அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 134 ரன்னுக்கு சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் இஸ்லாம் 43 ரன் எடுத்தார். அஷ்ரபுல் 38 ரன்னும், நபீஸ் 29 ரன்னும் எடுத்தனர். நான்கு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள், நான்கு வீரர்கள் ஒன்றை இலக்கு எண்ணில் ஆட்டம் இழந்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் ஜார்வீஸ், மசகடாசா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மீத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

##~~##
இதையடுத்து, 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணி வீரர் டெய்லர் மீண்டும் சதம் அடித்தார். 102 ரன் குவித்த அவர் கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை. வங்கதேசம் தரப்பில் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்க தேச அணி 147 ரன்னுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக அஷ்ரபுல் 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.  இதனால் 335 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே தரப்பில் கிரிமீர் 4 விக்கெட்டும், ஜார்வீஸ் 3 விக்கெட்டும் மசகடாசா, சிங்கும்புரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக டெய்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி முன்னிலையில் உள்ளது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி நடக்கிறது.