Published:Updated:

Virat Kohli: ‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்!’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி?

Virat Kohli: ‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்!’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி?
Virat Kohli: ‘இன்னும் ஒரு செஞ்சுரி எடுத்தா 2 ரெக்கார்ட்!’ - ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பாரா கோலி?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள்  போட்டியில், கோலி 81 ரன்களை எடுத்தால், 10 ஆயிரம் ரன்களை எடுத்த      5-வது இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெறுவார்.

Photo Credit: BCCI

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது அதிரடி ஆட்டத்தால் பல்வேறு சாதனைகளை முறியடித்துவருகிறார். இங்கிலாந்தில், இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறியபோது, தனியாளாக கவனத்தை ஈர்த்தார். ஆசியக்கோப்பை போட்டியில் ஓய்வில் இருந்த கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசத்தினார். அதைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அதிரடியாகக் கலக்கினார். இந்தப் போட்டியில் 140 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

ஒரு நாள் போட்டியில் தனது 36-வது சதத்தை விராட் கோலி பதிவுசெய்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸில் 60 சதம் ( ஒரு நாள், டெஸ்ட்)  பதிவுசெய்த வீரர்களின் பட்டியலில் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த சிம்மாசனத்தில் சச்சின் டெண்டுல்கர் நீண்ட காலமாக அமர்ந்திருந்தார். அவர், 426 இன்னிங்ஸில் 60 சதமடித்திருந்தார். இந்தச் சாதனையை தற்போது கோலி முறியடித்துள்ளார். 

இன்றைய போட்டியில், கோலி 81 ரன்களை எடுத்தால், 10ஆயிரம் ரன்களை எடுத்த 5-வது இந்திய வீரர் என்ற சிறப்பைப் பெறுவார். கோலி இதுவரை 212 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,919 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் என்ற சிறப்பையும் பெறுவார்.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 1,573 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.அவருக்கு அடுத்தபடியாக கோலி 1527 ரன்களுடன் கோலி 2-வது இடத்தில் உள்ளார். இந்தச் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 47 ரன்களே தேவைப்படுகின்றன.