Published:Updated:

ரஸல்... அப்போ ட்ராவல் அசிஸ்டென்ட்... இப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் மேனேஜர்!

ரஸல்... அப்போ ட்ராவல் அசிஸ்டென்ட்... இப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் மேனேஜர்!

தோனி பாசிட்டிவ் அண்டு சிம்ப்பிள். இவ்வளவு பாசிட்டவான மனிதரைப் பார்க்க முடியுமான்னு சந்தேகமே வரும். ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பார். அவர் ரூமின் கதவுகள் எப்போதுமே திறந்தேயிருக்கும். ஐபிஎல் நடக்கும்போதெல்லாம் 7-8 ப்ளேயர்ஸ் அவர் ரூம்லதான் இருப்பாங்க. எதற்குமே அப்செட் ஆகமாட்டார்.

ரஸல்... அப்போ ட்ராவல் அசிஸ்டென்ட்... இப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் மேனேஜர்!

தோனி பாசிட்டிவ் அண்டு சிம்ப்பிள். இவ்வளவு பாசிட்டவான மனிதரைப் பார்க்க முடியுமான்னு சந்தேகமே வரும். ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பார். அவர் ரூமின் கதவுகள் எப்போதுமே திறந்தேயிருக்கும். ஐபிஎல் நடக்கும்போதெல்லாம் 7-8 ப்ளேயர்ஸ் அவர் ரூம்லதான் இருப்பாங்க. எதற்குமே அப்செட் ஆகமாட்டார்.

Published:Updated:
ரஸல்... அப்போ ட்ராவல் அசிஸ்டென்ட்... இப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் மேனேஜர்!

சென்னை சூப்பர் கிங்ஸின் தனியொருவன் ரஸல் ராதாகிருஷ்ணன். தல தோனிக்கு ஆல் -இன்-ஆல் எல்லாமே இவர்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் ஐ.பி.எல் போட்டியிலிருந்து தற்போதுவரை இவர்தான் மேனேஜர். இவரிடம் சொன்னால் போதும்... எதுவும் நடக்கும் என்பதுதான் ரஸல் அணிக்குள் சம்பாதித்திருக்கும் புகழ். 

``வெற்றியோ, தோல்வியோ வீரர்களை உற்சாகமாக வைத்திருப்பதில்தான் சக்ஸஸ் இருக்கிறது'' என்னும் ரஸல் ராதாகிருஷ்ணன் டிராவிட் தலைமையிலான இந்திய அணியிலும் 4 ஆண்டுகள் முக்கிய அங்கமாக இருந்தவர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவின் `பிக்பாஷ்’ லீகில் விளையாடும் `மெல்போர்ன் ஸ்டார்ஸ்’ அணிக்கும் மேனேஜராக இருக்கிறார். அணி நிர்வாகம் குறித்தும், வீரர்களை நிர்வகிப்பது குறித்தும் ரஸல் ராதாகிருஷ்ணனிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீகிற்காகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தவரிடம் பேசினேன்.

``சொல்லுங்கள் ரஸல்... கிரிக்கெட் ஃபீல்டுக்குள் எப்படி வந்தீங்க?''
``நான் ஜூனியர் கிரிக்கெட்டர். அதன்பிறகு கோச்சிங் பண்ண ஆரம்பிச்சேன். எப்போதுமே கிரிக்கெட்டைச் சுற்றியேதான் இருப்பேன். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து என வெளிநாட்டு அணிகள் சென்னைக்கு விளையாட வரும்போது அவர்களுக்கு வழிகாட்ட, உதவ லோக்கல் மேனேஜரா 2003-ம் வருஷம் சீனிவாசன் சார் என்னை நியமிச்சார். நான் நல்லா ஆங்கிலம் பேசுவேன், வீரர்களோடு நன்றாகப் பழகிவிடுவேன் என்பதால்தான் சீனிவாசன் சார் அந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார். டெஸ்ட் மேட்ச் சென்னையில் நடக்கும்போது விசிட்டிங் டீம்ஸோடு ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கவேண்டியதிருக்கும். அப்போது அவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிடும். அவர்களுக்கு என்னை மிகவும் பிடித்துப்போகும். ஆஸ்திரேலியன் டீம் சென்னை வந்துவிட்டு இந்தியாவின் மற்ற ஊர்களுக்குப் போகும்போது என்னையே அனுப்பச்சொல்லி பி.சி.சி.ஐ-யிடம் கேட்ட சம்பவங்கள் எல்லாம் உண்டு.''

``லோக்கல் மேனேஜர் எப்படி இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்தார்?''
``இதற்கும் சீனிவாசன் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். 2007-ம் வருஷம் பி.சி.சி.ஐ மீட்டிங்ல வெஸ்ட் இண்டீஸ் டூருக்கு இந்தியன் டீமுக்கு லயஸன் மேனேஜர் மாதிரி ஒருத்தரை அப்பாயின்ட் பண்ணணும்னு பேச்சு வந்திருக்கு. அப்போதெல்லாம் ஒவ்வொரு டூருக்கும் ஒருத்தரை அப்பாயின்ட் பண்ணுவாங்க. ஆனால், அப்போதைய இந்தியன் டீம் கோச் க்ரெக் சேப்பல் நிரந்தரமா டீமோட ட்ராவல் பண்ற ஒரு ஆள் வேணும்னு கேட்டிருக்கார். அப்பதான் சீனிவாசன் சார் `தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன்ல ரஸல்னு ஒரு பையன் இருக்கான். 4 வருஷமா லோக்கல் மேனேஜரா இருக்கான். ரொம்ப நல்ல வேலை பண்றான். விசிட்டிங் டீம்ஸ் எல்லாம் அவனைப்பத்தி நல்ல ரிவ்யூஸ் கொடுத்திருக்காங்க'னு என்னைப் பரிந்துரை பண்ணியிருக்கார். அவர் சொன்னதன் மூலமாகத்தான் எனக்கு இந்தியன் டீம்ல வேலை பண்ற வாய்ப்பு கிடைச்சது.

லயஸன் மேனேஜர்னு சொன்னாலும் இந்தியன் டீமில் எனக்கு முதலில் கொடுக்கப்பட்ட பதவி ட்ராவல் அசிஸ்டென்ட் என்பதுதான். ப்ளேயர்ஸோட பைகளை எல்லாம் ஏர்போர்ட்டுக்குச் சரியான நேரத்துக்குக் கொண்டுபோய் சேர்ப்பது, பிறகு விமான நிலையத்திலிருந்து ரூம்ஸுக்கு கொண்டு போய் சேர்ப்பது... இதுதான் முதல் வேலை. டிராவிட்தான் அப்போது கேப்டன்.

வெஸ்ட் இண்டீஸ் போறதுக்கு முன்னாடி நாக்பூர்ல கேம்ப் நடந்தது. வெளிநாட்டு அணிகளோடு மட்டும்தான் வேலை செஞ்சவன் என்பதால் எனக்கு இந்திய அணியில் யாரையும் தெரியாது. இந்தியும் தெரியாது. ஆனால், என் உழைப்பின்மேல் மிகப்பெரிய நம்பிக்கை உண்டு என்பதால் இந்த வேலையை ஒரு சேலஞ்சா எடுத்து செய்ய ஆரம்பிச்சேன். நாக்பூர் கேம்ப் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது.  ப்ளேயர்ஸ் எந்த ஃப்ளைட்ல வர்றாங்கன்னு டீடெய்ல் சொல்லுவாங்க. அந்த டைம்ல ஏர்போர்ட் போய் என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு, அவங்க பையை எல்லாம் எடுத்துட்டு கேம்ப்க்கு வருவேன்.

ட்ராவல் அசிஸ்டென்ட்தான் என்றாலும் ஒரு மேனேஜருக்கான வேலையை கேப்டன் ராகுல் டிராவிட் என்கிட்ட கொடுக்க ஆரம்பிச்சார். ப்ளேயர்ஸுக்கு டிக்கெட்டை பிரிச்சிக் கொடுக்கிறது, அலவன்ஸ் கொடுக்கிறது, பிராக்டீஸ் ஷெட்யூலை டீம் மெம்பர்ஸுக்குச் சொல்றதுன்னு பல வேலைகள் டீம்குள்ள பார்க்க ஆரம்பிச்சேன்.

கிரெக் சேப்பல் அடுத்த நாள் 7 மணிக்கு ப்ராக்டீஸ்னு சொல்லுவார். நைட் பிராக்டீஸ் ஷெட்யூலை பிரின்ட் அவுட் எடுத்து ப்ளேயர்ஸ் ரூம்குள்ள போடுவேன். அதே போல் பேகேஜ் மேனேஜர்தான் முதல் வேலை என்பதால் எல்லாப் பைகளையும் கவுன்ட் எடுத்துட்டு ஹோட்டல் ஸ்டாஃப் துணையோடு வண்டில எடுத்துட்டு ஏர்போர்ட்டுக்குப் போயிடுவேன். அங்க பேகேஜை எல்லாம் ஸ்கேன் பண்ணிட்டு போர்டிங் பாஸ் ரெடி பண்ணிட்டு ப்ளேயர்ஸ் வருகைக்காகத் தயாரா இருப்பேன். ஒரே நேரத்தில் 120 பேகேஜை எல்லாம் செக் பண்ணி எடுத்திட்டு வந்திருக்கேன். 4 வருஷம் இந்தியன் டீமோட இருந்திருக்கேன். கடவுள் புண்ணியத்தில் ஒரு முறைகூட பேகேஜ் மிஸ் ஆனதே கிடையாது. 

2007 வேர்ல்டு கப் இந்தியன் டீம்கூட வெஸ்ட் இண்டீஸ் போனேன். அதன்பிறகு ரவி சாஸ்திரி, ராஜ்சிங் துங்கர்புர் வந்தார்கள். செப்டம்பர்ல  தோனி கேப்டன் ஆனார். 20/20 வேர்ல்டு கப் போனேன். இந்தியன் டீம் ஜெயிச்சதுன்னு நிறைய சம்பவங்கள். அப்படித்தான் தோனி எனக்குப் பழக்கமானார்.''

``ஏன் இந்தியன் டீமை விட்டுட்டு வந்தீங்க?''
2008-ம் வருஷம் என்னோட குடும்பம் ஆஸ்திரேலியாவுக்குக் குடி போய்ட்டாங்க. 2008-ல ஐ.பி.எல் கிரிக்கெட்டும் ஆரம்பிச்சிடுச்சு. ஐ.பி.எல், இந்தியன் டீம்னு ரெண்டையும் சமாளிக்க முடியல. 2009 சாம்பியன்ஸ் டிராபியோடு இந்தியன் டீம்ல இருந்து வெளியே வந்துட்டேன்.''

``சென்னை சூப்பர் கிங்ஸின் மேனேஜர் ஆனது எப்படி?''
``என்னடா திரும்பத் திரும்ப சீனிவாசன் சார் பேரைச் சொல்றேன்னு நினைக்கலாம். ஆனால், உண்மையை மாத்த முடியாதே. 2008-ம் வருஷம் காசி விஸ்வநாதன் சார் போன் பண்ணி `ஐபிஎல் கிரிக்கெட்ல நாம ஒரு டீம் எடுத்திருக்கோம். சென்னை சூப்பர் கிங்ஸ்தான் டீம். நீதான் மேனேஜரா இருக்கணும்னு சீனிவாசன் சார் சொல்லிட்டார்'னு சொன்னார். அவர் போன் வந்ததுதான் உடனடியா சேப்பாக்கம் ஸ்டேடியம்வந்து எல்லோரையும் மீட் பண்ணிட்டு உடனே வேலையை ஆரம்பிச்சிட்டேன். தோனியை ஏற்கெனவே தெரியும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸில் எனக்கு வேலைகள் ஈஸியாவே இருந்துச்சு.''

``தோனியோடு 10 ஆண்டுகளுக்கும் மேல் ட்ராவல் பண்ணியிருக்கீங்க. அவரிடம் கற்றுக்கொண்டது என்ன?''
``தோனி ரொம்ப சிம்ப்பிள்னு எல்லோரும் சொல்லிக் கேட்டிருப்பீங்க. இந்தப் பதிலை கேட்டுக் கேட்டு போர் அடிச்சிருக்கும். ஆனால், அதுதான் உண்மை. தோனி பாசிட்டிவ் அண்டு சிம்பிள். இவ்வளவு பாசிட்டவான மனிதரைப் பார்க்க முடியுமான்னு சந்தேகமே வரும். ரொம்ப ரிலாக்ஸ்டா இருப்பார். அவர் ரூமின் கதவுகள் எப்போதுமே திறந்தேயிருக்கும். ஐபிஎல் நடக்கும்போதெல்லாம் 7-8 ப்ளேயர்ஸ் அவர் ரூம்லதான் இருப்பாங்க. எதற்குமே அப்செட் ஆகமாட்டார். என்ன சொன்னாலும் அதை ரொம்பப் பக்குவமாக எடுத்துக்குவார். `இன்னையோட உலகம் முடிஞ்சிறப்போறதில்லை'' என்பதுதான் அவரது பதிலாக இருக்கும். அவருக்குப் பிடிக்காத சூழலாகக் கூட இருக்கலாம். ஆனால், எந்த எமோஷனையும் அவர் முகத்தில் காட்டமாட்டார். தோனிகிட்ட கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு.''

``சரி ஒரு வெற்றிகரமான அணியின் வெற்றிகரமான மேனேஜர் நீங்கள். உங்கள் பாதையில் ஒரு அணியின் மேனேஜராக வேண்டும் என்றால் ஒருவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்கவேண்டும்?''

``5 விஷயங்கள்தான் முக்கியம்னு நினைக்கிறேன். முதலில் டெடிகேஷன். அர்ப்பணிப்பு இல்லையென்றால் எந்த வேலையும் உங்களால் சரியாகச் செய்ய முடியாது. வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் செய்யும் வேலையை லவ் பண்ணணும். அதனால முதல் விஷயம் டெடிகேஷன்தான். இரண்டாவது பொறுமை. ஒரு சப்போர்ட் ஸ்டாஃபுக்கு மிக மிக அடிப்படையான தகுதி பொறுமை. எல்லா நேரமும் ப்ளேயர்ஸும், கோச்சும் ஒரே மாதிரி ரியாக்ட் செய்ய மாட்டாங்க. திடீரென தோல்வியின் அழுத்தத்தில் இருப்பாங்க. அப்போது அவர்கள் கோபப்படும்போது நாமும் எதிர்த்து கோபப்பட்டால் எல்லாமே முடிந்துவிடும். அதனால் பொறுமை மிக மிக அவசியம்.

மூன்றாவது மரியாதை. அவர் அணியின் சீனியர், ஜூனியர் என யாராக இருந்தாலும் சரி, அணிக்குள் அவர் என்ன வேலை செய்தாலும் சரி எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் மரியாதை தர வேண்டும். நான்காவது கடுமையான உழைப்பு. நீங்கள்தான் அணிக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கவேண்டும். நீங்கள்  அணியினருக்குத் தேவைப்படும்போதெல்லாம் உதவுபவராக, அவைலபிளாக இருக்கவேண்டும். உங்களைப் பார்க்கவே அப்பாயின்மென்ட் எடுக்கும் சூழல் எல்லாம் இருந்தால் எதுவும் சரியாக இருக்காது. ஐந்தாவது மேனேஜராக மட்டுமல்ல நல்ல மனிதராக இருக்கவே அடிப்படையான தகுதி இது. நேர்மை. உங்களிடம் நேர்மையும், உண்மையும் இருந்தால் எப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும் சமாளித்துவிடமுடியும்.''