Published:Updated:

ஐ.பி.எல்: கெய்ல் அதிரடியில் வீழ்ந்தது ராஜஸ்தான்

ஐ.பி.எல்: கெய்ல் அதிரடியில் வீழ்ந்தது ராஜஸ்தான்
ஐ.பி.எல்: கெய்ல் அதிரடியில் வீழ்ந்தது ராஜஸ்தான்
ஐ.பி.எல்: கெய்ல் அதிரடியில் வீழ்ந்தது ராஜஸ்தான்

பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்லின் அதிடிர ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூர் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு நடந்த 27வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் ராஸ்தானை பேட் செய்ய பணித்தது.

அதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, பெங்களூர் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. அதிரடி ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் (6), ரஹானே (14) அடுத்தடுத்து வெளியேறியதால், ராஜஸ்தானின் ரன்வேகம் குறைந்தது.

இருந்தாலும் என்றாலும் அடுத்த வந்த வீரர்கள் சரிவை ஓரளவு சமாளித்தனர். முடிவில் ராஜஸ்தான் 19.4 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ராகுல் டிராவிட் 35 ரன்களும் , ஸ்டூவர்ட் பின்னி 33 ரன்களும், பிராட் ஹாட்ஜ் 13 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை.

##~~##
பெங்களூர் தரப்பில் வினய்குமார், ஆர்.பி.சிங் தலா 3 விக்கெட்டுகளும், ரவி ராம்பால் 2 விக்கெட்டுகளும், உனட்கட், முரளிகார்த்திக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய பெங்களூர் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிறிஸ் கெய்ல் 49 ரன்களுடனும், சவுரப் திவாரி 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தில்ஷான் 25 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னிலும், டிவில்லியர்ஸ் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
7வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூர் அணிக்கு இது 5வது வெற்றியாகும். 6வது ஆட்டத்தில் களம் இறங்கிய ராஜஸ்தானுக்கு இது 2வது தோல்வியாகும்.