Published:Updated:

`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்!' - யாரைச் சொல்கிறார் விராட்?

`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்!' - யாரைச் சொல்கிறார் விராட்?
`அவர் எதிரே இருந்தால் போதும்... இலக்கை அடைவது சுலபம்!' - யாரைச் சொல்கிறார் விராட்?

'எதிர்புறம் ரோஹித் ஷர்மா இருந்தால் போதும், இலக்கை அடைவதில் எவ்வித சிக்கலும் இருக்காது' என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சைத் தேர்வுசெய்தது. ஹெட்மெயர் சதத்தின் உதவியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்குச் 322 சேர்த்தது. இதையடுத்துக் களமிறங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே தவான் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து, ரோகித் ஷர்மா - விராட் கோலி இணை கைகோத்தன. சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி, வெற்றியை எளிதாக்கியது. இந்திய  அணி 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் ஷர்மா 152 ரன்களுடனும் அம்பாதி ராயுடு 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தப் போட்டியில், விராட் கோலி 140 ரன்கள் எடுத்தார்.

விராட் கோலிக்கு இது 36-வது சதம். ரோஹித் சர்மாவுக்கு 20 சதம். இதில் ஆட்ட நாயகன் விருது விராட்கோலிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து விராட் கோலி பேசுகையில்,``வெஸ்ட் இண்டீஸ் அணியின் இலக்கு எங்களுக்குச் சவாலாக இருந்தது. அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நல்ல பாட்னர்ஷிப் அமைந்தால் இந்த இலக்கை எட்டிவிடலாம் என நினைத்துக் களமிறங்கினோம். மறுமுனையில் ரோஹித் ஷர்மா  நின்றால் போதும், எந்தவித சிரமுமின்றி இலக்கை அடைந்துவிடலாம். நானும் ரோஹித்தும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்தது, இது 5 அல்லது 6-வது முறையாக இருக்கும் என நினைக்கிறேன். போட்டியில், நான் அதிரடியாக ஆடுகிறேன், நீங்கள் நிதானமாக ஆடுங்கள் என்று ரோஹித்திடம் கூறினேன். நான் ஆட்டமிழந்ததும், ராயுடு நிதானமாக ஆடினார். ரோஹித் அதிரடிகாட்டினார். பந்துவீச்சாளர்களைப் பற்றி குறைசொல்ல முடியாது. வெஸ்ட் இண்டீஸ் மாதிரியான ஒரு அணியைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தது'' என்றார்.