
ஐ.பி.எல்: சன் ரைசர்ஸுக்கு தொடர் வெற்றி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி வீழ்த்தி தர வரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த 25வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, ஹைதராபாத்தின் பந்து வீச்சு தாக்குதலை சமாளித்து ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. எந்த ஒரு வீரரும் நீண்ட நேரம் நின்று விளையாடவில்லை.
அதிகபட்சமாக கேப்டன் கில்கிறிஸ்ட் 26 ரன்களும், பியுஷ் சாவ்லா 23 ரன்களும், டேவிட் ஹஸ்சி 22 ரன்களும், பால் வல்தாட்டி 6 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் அமித் மிஸ்ரா, கரன் ஷர்மா, இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
##~~## |