Published:Updated:

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  இன்று மோதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்று மோதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  இன்று மோதல்

கொல்கத்தாவில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. ஐபிஎல் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. கூடுதல் புள்ளிகளை பெற்று முன்னணியில் செல்ல சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற கடுமையாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஐபிஎல் தர வரிசையில் 7வது இடத்தில் இருக்கிறது.

வெற்றி பெற்றால் மட்டுமே தர வரிசையில் முன்னேற முடியும் என்பதால் இந்த போட்டியை எதிர்ப்பார்ப்புடன் எதிர் கொள்கிறது. கொல்கத்தா ரசிகர்களின் ஊக்கம் வெற்றிபெற கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் என கொல்கத்தா அணி எதிர்பார்க்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  இன்று மோதல்

பெங்களூரில் இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. தர வரிசையில் 3வது இடத்தில் இருக்கிறது. வெற்றியை தக்கவைத்துக் கொள்ள பெங்களூர் அணி தயாராகி வருகிறது.

போட்டி பெங்களூரில் நடப்பதால் வெற்றிக்கு கூடுதல் ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் நல்ல பார்மில் இருப்பதால் இன்றைய போட்டி அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும். தர வரிசையில் 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது.