Published:Updated:

கமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ! #BCCI

கமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ! #BCCI

வர்ணனைதான் கிரிக்கெட் இசை. நல்ல வர்ணனையோடு கிரிக்கெட்டை ரசிப்பது பேரின்பம். அது இனிமேல் கிடைக்காது என்பதுதான் பெரும் சோகம்!

கமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ! #BCCI

வர்ணனைதான் கிரிக்கெட் இசை. நல்ல வர்ணனையோடு கிரிக்கெட்டை ரசிப்பது பேரின்பம். அது இனிமேல் கிடைக்காது என்பதுதான் பெரும் சோகம்!

Published:Updated:
கமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ! #BCCI

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ். 12-வது ஓவர். வாரெக்கமன் பந்தில், பிரித்வி ஷா கட் ஷாட் அடிக்க எட்ஜாகி ஸ்லிப்புக்குச் செல்கிறது. ஷாய் ஹோப் கேட்சைத் தவறவிடுகிறார். 

மஞ்ச்ரேக்கர் : பிரித்வி ஷாவுக்கு கட் ஷாட் ஆடுவதில் அவ்வளவு பிரியம். ஆடிக்கொண்டே இருக்கிறார்.

கவாஸ்கர் : முதல் ஸ்லிப்பில் நிற்கும்போது மிகவும் விழிப்போடு இருக்கவேண்டும். அதுவும் டெஸ்ட் போட்டிகளில் இதுபோன்ற கேட்ச்களை விடக்கூடாது.

மஞ்ச்ரேக்கர் : பொதுவாக பேட்ஸ்மேன்கள் `ஃப்ரன்ட் ஃபூட்' வைத்து ஆடும்போது ஸ்லிப் ஃபீல்டர்கள் தயாராக இருக்கவேண்டும். 

பிரித்வி ஷா கட் ஷாட் ஆடுவதில் கொண்டிருக்கும் பிரியத்தைப் பற்றிப் பேசுகிறார் மஞ்ச்ரேக்கர். அதன்பின் ஷாய் ஹோப் செய்த தவற்றையும், அவர் என்ன செய்திருக்கவேண்டும் என்பதையும் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது கவாஸ்கர் - மஞ்ச்ரேக்கர் அடங்கிய அந்த மும்பைக் கூட்டணி. ஐந்தாவது ஸ்டம்ப் லைனில், சுழலாமல் சென்ற பந்தை கட் செய்த பிரித்வியின் முடிவை இருவரில் ஒருவர்கூட சாடவில்லை. முதல் போட்டி தொடங்கியதிலிருந்து இப்படிச் சிலபல தவறுகளை அவர் செய்துகொண்டுதான் இருக்கிறார்.

சொல்லப்போனால் அவர் டெஸ்ட் பேட்ஸ்மேனாக ஆடவில்லை. ஒருநாள் போட்டியைப் போலத்தான் இந்த ஆட்டங்களை அணுகினார். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர்கள் பேசவேயில்லை. ராஜ்கோட்டில் பாடிய பிரித்வி புராணம் ஹைதராபாத்திலும் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. எந்த மும்பை வீரர் விளையாடினாலும் இதேதான். இன்னும் எத்தனை நாள்கள் இந்த மும்பை புராணத்தைப் பொறுத்துக்கொள்வது. இதுவே ஒருகட்டத்தில் எரிச்சலாகிவிட்டது. இதுதான் வர்ணனையா, இதுதான் வர்ணனை அறமா, கிரிக்கெட் வர்ணனை என்பது எப்படியெல்லாம் இருந்தது...

கமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ! #BCCI

ஒரு ஐ.பி.எல் போட்டி. விக்கெட்டுக்குப் பிறகு அடுத்த பேடஸ்மேனாகக் களமிறங்குகிறார் டி வில்லியர்ஸ். முதலிரு பந்துகளும் பௌண்டரி எல்லையைக் கடக்கின்றன. அரங்கம் அதிர்கிறது. எல்லோரும் பௌண்டரிகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். திடீரென ஹர்ஷா போக்ளேவின் குரல். `Ladies and Gentlemen fasten your seatbelts. We are ready for the take Off'... அந்தக் குரல், ஹர்ஷா போக்ளேவின் அந்த வார்த்தைகள் டி வில்லியர்ஸைக் கொண்டாட வைத்தது. அந்த வார்த்தையின் ஜாலம், அந்த ஐந்தரை அடி உருவத்தை, பாகுபலியின் சிலையாக உயர்த்தியிருந்தது. என் செவிகளுக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் `ஏ.பி.டி...ஏ.பி.டி' என்று கத்தத் தொடங்கினார்கள். ஒற்றை வார்த்தையில் என்னென்னமோ செய்துவிட்டார் ஹர்ஷா. இவ்வளவு ஏன், 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சிக்ஸர் அடித்ததை, ம்யூட் செய்து ஒருமுறை பாருங்கள். `Dhoni finishes off in style. Magnificent strike into the crowd' என்ற ரவி சாஸ்திரியின் குரல் அதுவாகவே ஒலிக்கும். அதுதான் வர்ணனையாளர்கள் செய்யும் மாயம்!

சினிமாவில் ஒரு கதாநாயகனின் கவலையும் கண்ணீரும் மட்டும் பார்வையாளர்களை அழவைத்துவிடாது. அந்தக் காட்சியின் பின்னணியில் அழுதுகொண்டிருக்கும் அந்த வயலின் தானாகக் கண்ணீரை வரவைத்துவிடும். ஒரு மாஸ் ஹீரோவின் என்ட்ரியில் ஒலிக்கும் மாஸ் `பி.ஜி.எம்'தான் ரசிகர்களைச் சிலிர்க்கவைக்கும். இப்படி ஒரு திரைப்படத்தை உயிர்ப்பாக்குவது அந்தப் படத்தின் பின்னணி இசைதான். அதுபோல்தான் விளையாட்டுக்கு வர்ணனையும். விளையாட்டைப் பார்த்தால் மட்டும் போதுமென்றால், ம்யூட் செய்து ஸ்கோர் மட்டும் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், அதை ரசிக்கவேண்டுமென்றால், அனுபவிக்கவேண்டுமென்றால் அங்கு வர்ணனை இருக்கவேண்டும். தரமான வர்ணனை இல்லாத எந்தப் போட்டியும் முழுமையான அனுபவத்தைக் கொடுக்காது. 

கமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ! #BCCI

சொல்லப்போனால் கிரிக்கெட் பார்த்துப் பழகிய விளையாட்டில்லை. அது கேட்டுப் பழகியது. தொலைக்காட்சி ஆன்டனாக்களுக்கு முன்பாகவே, ரேடியோ ஆன்டனாக்களின் வழியாக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய விளையாட்டு அது. வார்த்தைகள்தாம் அன்று உணர்வுகளைக் கடத்தியது. பந்தின் வேகத்தை, அது அடிக்கப்பட்ட நளினத்தை, பந்துவீச்சாளரின் ஏமாற்றத்தை, ஃபீல்டர்களின் துடிப்பை, பேட்ஸ்மேனின் நம்பிக்கையை, பார்வையாளர்களின் கொண்டாட்டத்தை அப்படியே கடத்திக்கொண்டிருந்தார்கள் அந்த வர்ணனையாளர்கள். இங்கிலாந்தில் ரேடியோ வர்ணனையாளராக இருந்த ஹென்றி ப்ளோஃபெல்ட், தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது மொத்த லார்ட்ஸும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது. மைதானத்தின் புற்களிலிருந்து, அதில் அமர்ந்திருக்கும் புறாக்களின் அலகுகள் வரை ரசிகனுக்கு எடுத்துச் சென்றவர் அவர். அப்படிக் குரல்களால் ரசிக்கப்பட்ட விளையாட்டுதான் கிரிக்கெட்!

அந்த விளையாட்டின் தன்மையை வர்ணனை இன்னும் அழகாக்கவேண்டும். விளையாட்டின் தரமும், வர்ணனையின் தரமும் சமமாக இருக்கவேண்டும். ஒன்று குறையும்போது இன்னொன்று அதைச் சரிசெய்யவேண்டும். அப்போதுதான் ரசிகர்களால் அந்த ஆட்டத்தை ரசிக்க முடியும். அன்றெல்லாம் இரண்டின் தரமும் உச்சத்தில் இருந்தன. சச்சினின் ஸ்ட்ரெய்ட் டிரைவை டோனி கிரேக் குரலில் கேட்டதும், வார்னேவின் சுழலை ஜெஃப்ரி பாய்காட் வார்த்தைகளில் ரசித்ததும் வேறு வகையான அனுபவம். ஆனால், இன்று..? கிரிக்கெட்டின் தரம் வேகமாக வீழ்ந்துகொண்டிருக்க, அதற்கு ஈடுகொடுத்து வர்ணனையின் தரமும் பாதாளம் நோக்கிப் பாய்கிறது. இன்றைய வர்ணனைகளைக் கேட்டால், கிரிக்கெட் மீதான ஆர்வமே போய்விடும்போல் இருக்கிறது. 

கமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ! #BCCI

வர்ணனை செய்வது கிரிக்கெட்டைத்தான் என்றாலும், அதற்கு கிரிக்கெட் மட்டும் தெரிந்திருந்தால் போதாது. ஆனால், இன்று மைக் பிடித்துக்கொண்டிருக்கும் பலரும் கிரிக்கெட் வீரர்களாக இருந்ததனால் வர்ணனையாளராக அமர்த்தப்பட்டவர்கள். கவர் டிரைவ், ரிவர்ஸ் ஸ்விங், பேடில் ஸ்வீப் போன்ற டெக்னிக்கல் வார்த்தைகள் தாண்டி வேறு எதுவும் அவர்கள் பேசுவதில்லை. பேசத் தெரிவதில்லை. அதற்குமேல், தொலைக்காட்சி ஸ்கிரீனில் காட்டும் ஸ்டேட்களை அப்படியே படித்துக்காட்டுவதோடு முடித்துக்கொள்கிறார்கள். இன்றைய வர்ணனையாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ரகம்தான். இப்படியான வர்ணனையாளர்கள் இருப்பதைத்தான் பி.சி.சி.ஐ விரும்புகிறது. 

இதற்கும் ஏன் பி.சி.சி.ஐ அமைப்பையே குறை சொல்லவேண்டும்? அதற்கு முன் ரிச்சி பெனாட் பற்றி ஒரு விஷயம் தெரிந்துகொள்வோம். இந்த லெஜண்டரி ஆஸ்திரேலிய வர்ணனையாளருக்கு மைக்கேல் கிளார்க், டேவிட் வார்னர் போன்ற வீரர்களே வெறித்தன ரசிகர்கள். 1981-ம் ஆண்டு அன்றைய ஆஸ்திரேலிய கேப்டன் கிரெக் சாப்பல் தயவால் `அண்டர் ஆர்ம் பால்' சர்ச்சை எழுந்தபோது, ``நான் சொல்வதை யார் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, நான் நினைப்பது இதுதான்: தன் சிந்தனையை இழந்த ஒரு கேப்டன் எடுத்த கேவலமான முடிவு அது" என்று அவ்வளவு வெளிப்படையாகப் பதிவிட்டார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனை விமர்சிக்கிறோம் என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை. அவரது வார்த்தைகள் அவ்வளவு நேர்மையானவை. அந்த ஆட்டத்தின்போது வர்ணனையாளராக இருந்த கிரெக் சேப்பலின் அண்ணன் இயான் சேப்பல் `இதை நீ செய்தது ரொம்பத் தவறு கிரெக்' என்று நேரலையிலேயே சொன்னார். தங்களின் கருத்துகளை நேரடியாகச் சொன்னதால்தான் இன்றுவரை அவர்கள் பேசப்படுகிறார்கள். அவர்களின் குரல் பேசப்படுகிறது. 

கமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ! #BCCI

ஆனால், இப்போது... இன்று வர்ணனையாளர்களை நியமிப்பதில் சேனல்களைவிட கிரிக்கெட் போர்டுகளுக்குத்தான் அதிகாரம் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இந்திய வீரர்களை வர்ணனையில் விமர்சித்ததற்காக ஹர்ஷா போக்ளேவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தத்திலிருந்து விடுவித்தது பி.சி.சி.ஐ. இப்போது அவர் வெளிநாட்டுத் தொடர்களின் உரிமம் வைத்திருக்கும் சோனி சேனலுக்கு மட்டுமே (2018 ஐ.பி.எல் தவிர்த்து) வர்ணனை செய்துகொண்டிருக்கிறார். ஆக, இன்றைய தேதிக்கு மிகச்சிறந்த வர்ணனையாளரான அவர் வருடத்துக்கு ஒன்றிரண்டு தொடர்களுக்கு மட்டுமே வர்ணனை செய்கிறார். இந்தியாதான் வெளிநாடுகளுக்கு அதிகம் செல்வதில்லையே. உள்ளூரில் வைத்து வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசத்தை அடிப்பதற்கே நேரம் போதவில்லை!

போக்ளேவை இப்படிக் கெடுத்தது என்றால், ரவி சாஸ்திரி என்னும் நல்ல வர்ணனையாளரை வேறு மாதிரி கெடுத்தது பி.சி.சி.ஐ. அவருக்கு நன்றாகத் தெரிந்த வேலையைச் செய்துகொண்டிருந்தவரை பயிற்சியாளராக்கி, அணியையும் கெடுத்து... என்னத்தைச் சொல்வது. பயிற்சியாளராக ரவி சாஸ்திரி எப்படி என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால், அவர் சிறந்த வர்ணனையாளர். தோனியின் அந்தக் கடைசி பால் சிக்ஸர் மட்டுமல்ல, 2007 டி-20 உலகக் கோப்பையில் ஸ்டுவார்ட் பிராட் ஓவரில் யுவி சிக்ஸர்கள் பறக்கவிட்டபோது, அதை இன்னும் பிரமாண்டமாக்கியது அவர் குரல்தான். ``சிக்ஸ்...சிக்ஸ்...சிக்ஸ்...பல்லே பல்லே பல்லே இன் த கிரவுட்" என்று அவர் சொல்வதைக் கேட்டால், இப்போதும் சிலிர்த்துப்போய் சில்லறைகள் விட்டெறியத் தூண்டும்.

கமென்ட்ரி கேட்கவே ஒரு கூட்டம் இருக்கு... அதை மிஸ் பண்ண வேண்டாம் பி.சி.சி.ஐ! #BCCI

இன்றும்கூட ஒரு பந்து புயல் வேகத்தில் பௌண்டரியை அடைந்தால், ``ரவி இந்த இடத்தில் இருந்திருந்தால் `It went like a tracer bullet' என்று சொல்லியிருப்பார்" என்பார்கள் இன்றைய வர்ணனையாளர்கள். அந்த அளவுக்கு கமென்டரி பாக்ஸில் அவருக்கான இடத்தைப் பதித்திருந்தார். இப்போது ரவியின் இடத்தில் இருப்பது கும்பிளே. ஒழுங்காகப் பயிற்சியாளர் பதவியில் இருந்தவரை, அவருக்கு வராத வேலையில் உட்கார வைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் போர்டு. ஆசியக் கோப்பை என்ற கொடூர தொடரை, கும்பிளேவின் வர்ணனையில் பார்த்தவர்கள் இனி ஜென்மத்துக்கும் ஆசியக் கோப்பை பார்க்க மாட்டார்கள். அப்படி இருந்தது ஜம்போவின் கமென்டரி. இந்த இருவரும் வேலைகளை மாறி மாறி செய்வதை `The curious case of Ravi and Anil' என்று டாகுமென்ட்டே செய்யலாம்!

சரி வேறு வர்ணனையாளர்களே இல்லையா என்ன? இருக்கிறார்கள் நாசர் ஹுசைன், ரமீஸ் ராஸா, சைமன் டூல் போன்ற நார்மலான வர்ணனையாளர்கள். அவர்கள் பெரிதாக ஈர்க்கக்கூடியவர்கள் இல்லை என்றாலும் பொறுத்துக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால், அவர்கள் வர்ணனை செய்யும் நேரம் குறைவுதான். ஒவ்வொரு செஷனுக்கும் ஒவ்வொருவராக மாறிவிடுவார்கள். மற்ற நேரங்களில் இருப்பது மஞ்ச்ரேக்கரும், கவாஸ்கரும், கும்ப்ளேவும்தான். ஒருவர் என்ன பேசுவது என்றே தெரியாமல் இருக்க, மற்ற இருவரும் வேறு ரகத்தில் இருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க, மற்ற மொழி வர்ணனையெல்லாம் ஏலியன் லெவல். வர்ணனை தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. கிரிக்கெட் தெரிந்தால் மைக் பிடித்துவிடலாம். தமிழ் - இன்னும் ஒருபடிமேல். கிரிக்கெட்டும் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. வாய்க்கு வந்த வார்த்தைகளையெல்லாம் மைக்கில் கொட்டலாம். சொல்லப்போனால் டி.என்.பி.எல் தொடரை ஒட்டுமொத்தமாக வெறுக்கவைத்தது தமிழ் கமென்ட்ரியின் மிகப்பெரிய வெற்றி.

எல்லா மொழிகளிலும் வர்ணனையின் அழகு இப்படித்தான் இருக்கிறது. கூடிய விரைவில்... வர்ணனையாளர்களை, அவர்களின் வர்ணனையைக் கொண்டாடிய காலம்போய், வர்ணனையால் கிரிக்கெட்டையே வெறுக்கும் காலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.