Published:Updated:

ஐ.பி.எல்: தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்த டெல்லி

ஐ.பி.எல்: தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்த டெல்லி
ஐ.பி.எல்: தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்த டெல்லி
ஐ.பி.எல்: தொடர்ந்து 6வது தோல்வியை சந்தித்த டெல்லி

புதுடெல்லி : டெல்லியில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கி்ங்ஸ் அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 83 ரன்னுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த தொடரில் இன்னும் ஒரு வெற்றி கூட பெறாத டெல்லி அணி தொடர்ச்சியாக 6வது தோல்வியை சந்தித்துள்ளது.

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 24வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக மைக் ஹஸ்சியும், முரளிவிஜயும் களம் இறங்கினர். 18 ரன் எடுத்திருந்த விஜய் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அடுத்து சுரேஷ் ரெய்னா, ஹஸ்சியுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 90 ரன்களை எட்டிய போது ரெய்னா 30 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து கேப்டன் டோனி களம் இறங்கி அதிரடியாக விளையாடினார். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. மறுமுனையில் ஹஸ்சியும் அதிரடி காட்டினார்.

அபாரமாக ஆடிய டோனி 23 பந்தில் 44 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதில், 5 பவுண்டரி, ஒரு சிக்சர் அடக்கம். அடுத்து வந்த பிராவோ 3 ரன்னில் ரன் அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. தனது 8வது அரைசதத்தை பூர்த்தி செய்த மைக் ஹஸ்சி 65 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

##~~##
170 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில், முதல் ஓவரை ஷேவாக் சிக்சருடன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளர்களிடம் டெல்லி பேட்ஸ்மேன்கள் சரணடைந்தனர். வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மாவின் பந்து வீச்சில் டேவிட் வார்னர் (1) கிளீன் போல்டானார். ஜூனேஜா (2), ஷேவாக் (17) ஆகியோரும் அவரது பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.
கேப்டன் ஜெயவர்த்தனேவும் (6) வெளியேற, வழக்கம் போல் டெல்லி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 17.3 ஓவர்களில் டெல்லி அணி 83 ரன்களுக்கு சுருண்டது. ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக 87 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் குறைந்த ஸ்கோராக இருந்தது. இதன் மூலம் 86 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
5வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணிக்கு இது 3வது வெற்றியாகும். அதே சமயம் இன்னும் ஒரு வெற்றி கூட பெறாத டெல்லி அணி தொடர்ச்சியாக சந்தித்த 6வது தோல்வியாகும்.
சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கொல்கத்தாவில் நாளை சந்திக்கிறது.