Published:Updated:

ஐ.பி.எல்: ராஜஸ்தானிடம் பணிந்தது மும்பை இந்தியன்ஸ்

ஐ.பி.எல்: ராஜஸ்தானிடம் பணிந்தது மும்பை இந்தியன்ஸ்
ஐ.பி.எல்: ராஜஸ்தானிடம் பணிந்தது மும்பை இந்தியன்ஸ்
ஐ.பி.எல்: ராஜஸ்தானிடம் பணிந்தது மும்பை இந்தியன்ஸ்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில்  நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 87 ரன்கள் வீழ்த்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 23வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷேன் வாட்சனும், ரஹானேவும் தொடக்கக் ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக விளையாடி  வாட்சன் 31 ரன் எடுத்திருந்த போது ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய திஷாந்த் யாக்னிக் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னில் அவுட் ஆனார். மிட்செல் ஜான்சன் வீசிய கடைசி ஓவரில் ரஹானே- பிராட் ஹாட்ஜ் ஜோடி 19 ரன்களை சேகரித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது. 7வது அரைசதத்தை பூர்த்தி செய்த ரஹானே 68 ரன்னுடன், ஹாட்ஜ் 27 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

##~~##
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி முதல் ஓவரிலேயே சச்சின்  (1) ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் ரிக்கி பாண்டிங்கும் (4) சொற்ப ரன்னில் வீழ்ந்தார். பின்னர் வந்த ரோகித் ஷர்மா (2), பொல்லார்ட் (1) அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் 18.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த மும்பை அணி 92 ரன்களில் சுருண்டது. இந்த சீசனில் ஓர் அணியின் குறைந்தபட்ச ரன் இதுவாகும்.
இதன் மூலம் 87 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 5வது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு இது 4வது வெற்றியாகும். 5வது லீக்கில் விளையாடிய மும்பை அணிக்கு இது 2வது தோல்வியாகும்.