Published:Updated:

ஐ.பி.எல்: அமித் மிஸ்ரா சுழலில் சுருண்டது புனே வாரியர்ஸ்

ஐ.பி.எல்: அமித் மிஸ்ரா சுழலில் சுருண்டது புனே வாரியர்ஸ்
ஐ.பி.எல்: அமித் மிஸ்ரா சுழலில் சுருண்டது புனே வாரியர்ஸ்
ஐ.பி.எல்: அமித் மிஸ்ரா சுழலில் சுருண்டது புனே வாரியர்ஸ்

புனே: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ராவின் மாயாஜால பந்தில் புனே வாரியர்ஸ் அணி படுதோல்வி அடைந்தது.

புனேயில் நடந்த நேற்று மாலை நடந்த 22வது லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் - ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணி, முதலில் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  41 ரன்கள் எடுப்பதற்குள் 5 முன்னணி விக்கெட்டுகள் சரிந்தது.

20 ஓவர்கள் முடிவில் புனே அணி 8 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. பிப்லாப் சமந்த்ராய்  (37), அமித் மிஸ்ரா (30), பார்த்தீவ் பட்டேல் (12), ஆஷிஷ் ரெட்டி (19) ஆகியோர் தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் ராகுல் ஷர்மா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் புனே அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ராபின் உத்தப்பாவும், ஆரோன் பிஞ்ச்சும் முதல் 4 ஓவர்களில் 7 பவுண்டரியுடன் 38 ரன்கள் விளாசி அருமையான தொடக்கம் தந்தனர். உத்தப்பா 22 ரன்களும், பிஞ்ச் 16 ரன்களும் எடுத்த நிலையில் திசரா பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.

##~~##
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தாலும் அந்த அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. கடைசியில் 20 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் புனே அணி இருந்தது. ஆனால், ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. மிட்செல் மார்ஷ் (14), அபிஷேக் நாயர் (0) அடுத்தடுத்து வெளியேற, கேப்டன் மேத்யூஸ் களத்தில் நின்றார்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் 19வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வீசினார். இதன் 2வது பந்தில் மேத்யூஸ் (20) ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து 3வது பந்தில் மனிஷ் பாண்டே ஒரு ரன் எடுத்தார். இதையடுத்து புவனேஷ்வர்குமார், ராகுல் ஷர்மா, அசோக் திண்டா ஆகியோரை தனது சுழலில் சாய்த்த அமித் மிஸ்ரா, ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி, அணியை வெற்றி பெற வைத்தார்.
முடிவில் புனே வாரியர்ஸ் அணி 19 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியிடம் தோல்வி தழுவியது. அமித் மிஸ்ரா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
6 போட்டிகளி்ல் விளையாடியுள்ள ஹைதராபாத் அணிக்கு இது 4வது வெற்றியாகும். அதே சமயம் 6 போட்டிகளில் விளையாடிய புனே வாரியர்ஸ் அணி சந்தித்த 4-வது தோல்வியாகும்.