Published:Updated:

35 ரன்களில் சுருண்ட சீனா; மூன்று ஓவரில் வெற்றிபெற்று அசத்திய தாய்லாந்து #T20

35 ரன்களில் சுருண்ட சீனா; மூன்று ஓவரில் வெற்றிபெற்று அசத்திய தாய்லாந்து #T20
35 ரன்களில் சுருண்ட சீனா; மூன்று ஓவரில் வெற்றிபெற்று அசத்திய தாய்லாந்து #T20

ஐ.சி.சி நடத்தும் உலக அளவிலான டி-20 போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிப் போட்டிகள்  நடைபெற்று வருகிறது. ஆசிய அளவிலான இந்தத் தகுதிப் போட்டியில் இன்று சீனா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. கோலாலம்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சீனா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

35 ரன்களில் சுருண்ட சீனா; மூன்று ஓவரில் வெற்றிபெற்று அசத்திய தாய்லாந்து #T20

முதலில் பேட் செய்த சீனா அணி 20 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வாங் அதிகபட்சமாக 8 ரன்கள் எடுத்தார். தாய்லாந்து அணியின் டி.எப்.ஜாக்கப்ஸ் 4 ஓவர்கள் பந்துவீசி, 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய தாய்லாந்து அணி 2.4 ஓவர்கள் விளையாடி 36 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு , 8 பந்துகளில் 19 ரன்களும் விளாசிய தாய்லாந்து அணியின் டி.எப்.ஜாக்கப்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் முதலில் பேட்செய்த மியான்மர் அணி 10 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 29 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நேபாள் அணி 3 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதுவரை இந்தத் தகுதிப் போட்டியில் 4 ஆட்டங்கள் முடிந்துள்ளன.