Published:Updated:

``ஒரு ஊரையே காப்பாற்றுவார் தோனி!'' - நெகிழும் நண்பர்

``ஒரு ஊரையே காப்பாற்றுவார் தோனி!'' - நெகிழும் நண்பர்

"தோனி அளவுக்கு மீடியாவை யாரும் அவ்வளவு இயல்பா சமாளிக்க முடியாது. ஓய்வு பற்றி கேள்விகள் வந்தப்ப அவர் எப்படிச் சாமாளிச்சார்னு நீங்களே வீடியோல பார்த்திருப்பீங்க. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக்கூடியவர் தோனி. எந்தக் கேள்வியையும் தவிர்க்கமாட்டார்."

Published:Updated:

``ஒரு ஊரையே காப்பாற்றுவார் தோனி!'' - நெகிழும் நண்பர்

"தோனி அளவுக்கு மீடியாவை யாரும் அவ்வளவு இயல்பா சமாளிக்க முடியாது. ஓய்வு பற்றி கேள்விகள் வந்தப்ப அவர் எப்படிச் சாமாளிச்சார்னு நீங்களே வீடியோல பார்த்திருப்பீங்க. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக்கூடியவர் தோனி. எந்தக் கேள்வியையும் தவிர்க்கமாட்டார்."

``ஒரு ஊரையே காப்பாற்றுவார் தோனி!'' - நெகிழும் நண்பர்

தோனி 2014 ஆஸ்திரேலிய டூரின்போது ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்பது தோனி தவிர இன்னொருவருக்குத் தெரியும் என்றால் அவர் பாபாதான். 2011 உலகக்கோப்பையின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் மீடியா மேனேஜராக இருந்தவர், 2015 உலகக்கோப்பையின்போது இந்திய கிரிக்கெட் அணியின் மீடியா மேனேஜராக உயர்ந்திருந்தார். மீடியா மேனேஜராக மட்டுமல்ல, லாஜிஸ்டிக்ஸ் மேனேஜராகவும் இந்திய கிரிக்கெட் அணிக்காக உழைத்தவர் பாபா. 2012 முதல் 2015 வரை இந்திய அணிக்கு ஆல் இன் ஆல் இவர்தான். தோனி- கோலி கேப்டன்ஸி முதல் பல விஷயங்கள் அவரிடம் பேச இருக்கின்றன. ஆனால், அதற்கு முன் பாபாவின் பர்சனலைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

இவர் சாதாரண பாபா அல்ல டாக்டர் பாபா. எம்.பி.பி.எஸ் படித்த டாக்டர். அம்பத்தூரில் டாக்டர் ரபீந்திரன் ஹெல்த் சென்டர் என்கிற பெயரில் மிகப்பெரிய மருத்துவமனையை நடத்திவருகிறார். இவரது ஹாபிதான் கிரிக்கெட். இவரது இரட்டையர் மகன்கள் இந்திரஜித், அபராஜித் இருவரும் தமிழ்நாடு ரஞ்சி அணிக்காக விளையாடிவருகிறார்கள். 

``டாக்டர் டு மீடியா மேனேஜர்... இந்த டிராவல் பற்றிச் சொல்லுங்க?!''

``நான் ஒரு ஏரிக்கரை கிரிக்கெட்டர். பிறந்தது வளர்ந்தது எல்லாமே ரெட் ஹில்ஸ்தான். அங்க ஏரிக்கரை பக்கத்தில்தான் கிரிக்கெட் ஆடுவோம். கிரிக்கெட் பிடிக்கும் அவ்வளவுதான். அதைத்தாண்டி என் குடும்பத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல நாலரை வருஷம் படிப்பு, முடிஞ்சதும் அங்கேயே ஒரு வருஷம் ஹவுஸ் சர்ஜனாவும் வேலை பார்த்தேன். 

கல்யாணம் ஆச்சு... ட்வின்ஸ் பிறந்தாங்க. என்னோட பசங்களை கிரிக்கெட்டர் ஆக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்ப அம்பத்தூர்ல மருத்துவமனையை இயக்க ஆரம்பிச்சிட்டேன். பக்கத்துல டன்லப் கிரவுண்ட்ல ஃபைவ் ஸ்டார் கிரிக்கெட் அசோசியேஷன் இருந்துச்சு. அவங்க அங்க கிரிக்கெட் கோச்சிங் நடத்துவாங்க. அதுல என் பசங்களைச் சேர்க்கப்போனேன். பசங்களுக்கு 3 வயசுதான் ஆகுது. 5 வயசுல இருந்துதான் கோச்சிங் சேர்த்துப்போம்னு சொல்லிட்டாங்க. ஆனால், நான் தினமும் கிரவுண்டுக்குக் கூட்டிட்டுப்போய் நெட்ஸ்ல பிராக்டீஸ் கொடுப்பேன். அதைப் பார்த்துட்டு நாலு வயசுலேயே பசங்களை சேர்த்துக்கிட்டாங்க. பசங்க 9 வயசுலேயே தமிழ்நாட்டுக்கு ஆட ஆரம்பிச்சிட்டாங்க. 

என்னோட கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்துட்டு 1999-ம் வருஷம் என்னை திருவள்ளூர் கிரிக்கெட் அசோசியேஷன் துணைத் தலைவரா தேர்ந்தெடுத்தாங்க. மூணு வருஷம் துணைத் தலைவரா இருந்தேன். 2002-ல இருந்து இப்பவரைக்கும் திருவள்ளூர் கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளரா இருக்கேன். திருவள்ளூர் அசோசியேஷன் செயலாளர் என்பதால் என்னை 2003-2004 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் மேட்சுகளுக்கான மெடிக்கல் டீம்ல சேர்த்தாங்க. மெடிக்கல் டீம்ல இருந்தேன். 2004-ம் வருஷம் திடீர்னு மீடியா மேனேஜரா இருந்தவர் ரிசைன் பண்ண, என்னைப் பார்த்துக்கச் சொன்னாங்க. அதுவரைக்கும் மீடியாவுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மீடியா வேலைகள் நல்லா பண்ணதால் தொடர்ந்து என்னையே மீடியா மேனேஜர் ஆக்கிட்டாங்க. இதுதான் என் ஆரம்பம்.''

``இந்திய அணிக்கு மீடியா மேனேஜராகவும், லாஜிஸ்டிக்ஸ் மேனேஜராகவும் ஆனது எப்படி?''

``2008 ஐ.பி.எல் ஆரம்பிச்சப்ப பி.சி.சி.ஐ-ன் மீடியா கமிட்டியில் உறுப்பினரா சேர்க்கப்பட்டேன். 5 வருஷ கமிட்டி மெம்பர். ஒவ்வொரு கமிட்டி மெம்பரையும் ரொட்டேஷன்ல இந்திய அணிக்கு மீடியா மேனஜராப் போடுவாங்க. அப்படித்தான் 2012 ஐசிசி வேர்ல்டு டி20 கோப்பைக்கு முதல்முறையாக மீடியா மேனஜரா நியமிக்கப்பட்டேன். அப்போது டங்கன் ஃப்ளெட்சர்தான் இந்திய அணியின் பயிற்சியாளர். கேப்டன் தோனி. அந்தத் தொடருக்கு நான் என்னை முழுமையா டெடிகேட் பண்ணிட்டு வொர்க் பண்ணினேன். பயிற்சியாளர் டங்கன் ஃப்ளெட்சர், `இதுக்கு முன்னாடி எல்லாம் கூட வர்ற மேனேஜர்ஸ் டூர் வந்தவங்க மாதிரி இருப்பாங்க. மீடியாகிட்ட சொல்லக்கூடாத தகவல்களை எல்லாம் சொல்லுவாங்க. ஆனா, நீங்க உண்மையான சப்போர்ட் ஸ்டாஃப்பா இருக்கீங்க'ன்னு சொன்னார். அவர்தான் பி.சி.சி.ஐ மேனேஜ்மென்ட்கிட்ட `ஒரே மீடியா மேனேஜர் இருக்கட்டும். மாத்த வேண்டாம்'னு சொன்னார். அதில் இருந்துதான் நான் தொடர்ந்து மூணு வருஷம் மீடியா மேனேஜரா இருந்தேன்.''

``லாஜிஸ்டிக்ஸ் மேனேஜர் என்றால் அவர்களுக்கு என்ன வேலை..?''

``லாஜிஸ்டிக்ஸ் மேனேஜர்தான் அணியில் முக்கியமானவர். ப்ளேயர்களின் விமான டிக்கெட்டுகளை ஒழுங்குபடுத்துறதுல இருந்து ப்ளேயர்ஸோட கம்ஃபர்ட்டைப் பார்த்துக்குறவரைக்கும் பல பொறுப்புகள்.  

`ப்ளேயர்ஸை கம்ஃபர்ட் ஸோன்ல வெச்சிக்கணும். ப்ளேயர்ஸுக்கு கம்மியான வேலைகொடுத்து பிராக்டீஸ்ல விடணும். சப்போர்ட் ஸ்டாஃப்னா ரியல் சப்போர்ட் ஸ்டாஃபா இருக்கணும். அவங்க விளையாடுறதுனாலாதான் நமக்கு வேலையிருக்கு' னு டங்கன் ஃப்ளெட்சர் சொல்லுவார். அப்படி ப்ளேயர்ஸை ஈஸியா வெச்சிக்கிட்டோம்னா நல்ல ரிசல்ட்ஸும் கிடைக்கும்.

ஒவ்வொரு டூருக்கும் ஒரு க்ரூப் ஆரம்பிப்போம். முன்னாடி பிளாக்பெர்ரி மெசஞ்சர்தான் இருக்கும். அப்புறம் வாட்ஸ் அப் க்ருப். இப்போ மெயில் க்ரூப்பாக மாறியிருக்கு. இந்த குரூப்ல அந்த டூர்ல விளையாடுற ப்ளேயர்ஸ் ப்ளஸ் சப்போர்ட் ஸ்டாஃப் மட்டும்தான் இருப்பாங்க. டூர்ல இல்லாத ப்ளேயர்ஸ் எவ்வளவு பெரிய சீனியர்ஸா இருந்தாலும் இருக்கமாட்டாங்க. இதில் பேசப்படுற எந்த ஒரு விஷயமும் வெளியே போகக்கூடாதுன்றதுனால இப்ப பி.சி.சி.ஐ சர்வர்ல வெச்சு மெயில் க்ரூப் பண்ணியிருக்காங்க. 

நான் போனதில் இங்கிலாந்து டூர்தான் மிகப்பெரிய டூர். மொத்தம் 107 நாள்கள். சில ப்ளேயர்ஸ் டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட்னு மூணு ஃபார்மேட்லயும் விளையாடுவாங்க. அதனால் டூர் முழுக்கவும் ப்ளேயர்ஸை நல்ல மூட்ல வெச்சிக்கணும். டீம் ஸ்பிரிட் போயிடக் கூடாது. இங்கிலாந்தைப் பொறுத்தவரைக்கும் நல்ல விஷயம் என்னன்னா இங்கிலாந்துக்குப் போறதுக்கு மட்டும்தான் ஃப்ளைட் ட்ராவல். அதன்பிறகு எல்லாமே பஸ்தான். இங்கிலாந்துக்குள்ள எந்த ஸ்டேடியம் போகணும்னாலும் 3 மணிநேரப் பயணம்தான். ட்ராவல் அங்க ஈஸியா இருக்கும். ஆனா, விளையாடுற கண்டிஷன்ஸ் ரொம்ப டஃப்பா இருக்கும். அதனால டீம் மாரல் ரொம்ப முக்கியம். மேட்ச் இல்லாத நாள்கள்ல வெளிலே போய் வேற ஏதும் குழு விளையாட்டுகள் விளையாடுறது, எதுவும் செய்யாமல் சும்மா ரிலாக்ஸ் பண்ணுறதுனு டீமை நல்ல மூட்ல வெச்சிக்கிறதும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜரோட வேலைதான்.''

``ஓகே. செய்தியாளர் சந்திப்பில் சிறப்பாக நடந்துகொள்ளும் வீரர் யார்?''

``தோனிதான். அவர் அளவுக்கு மீடியாவை யாரும் அவ்வளவு இயல்பா சமாளிக்க முடியாது. ஓய்வு பற்றி கேள்விகள் வந்தப்ப அவர் எப்படிச் சாமாளிச்சார்னு நீங்களே வீடியோல பார்த்திருப்பீங்க. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக்கூடியவர் தோனி. எந்தக் கேள்வியையும் தவிர்க்கமாட்டார்.''

``தோனி ஓய்வை அறிவித்த நாள் பற்றிச் சொல்லுங்க?''

``முதல்ல அந்த விஷயம் பற்றி என்னிடம் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமா டீம்குள்ள தகவல் பரவ ஆரம்பிச்சிடுச்சு. பிரஸ் மீட்ல அறிவிச்சிடவான்னு கேட்டார். கொஞ்சம் கலந்து பேசி பி.சி.சி.ஐ-கிட்ட சொல்லி, பி.சி.சி.ஐ மூலமா அறிவிப்பை வெளியிடலாம்னு முடிவு பண்ணினோம். ரொம்ப கஷ்டமான நாள் அன்று. டீமில் எல்லோருமே எமோஷனலாக இருந்தார்கள்.''

``தோனி, கோலின்னு இரண்டு கேப்டன்களோடும் வேலை செஞ்சிருக்கீங்க. உங்க பார்வையில் இருவரைப் பற்றியும் சொல்லுங்க?''

``கோலி தேவையில்லாமல் எதுவும் பேசமாட்டார். கிரவுண்ட்ல ஆக்ரோஷமா இருப்பார். ஆனால், வெளியே வந்துட்டா அவ்ளோ ஃப்ரெண்ட்லியா இருப்பார். யார் ஆட்டோகிராஃப் கேட்டாலும், எவ்ளோ அவசரமா இருந்தாலும் நின்னு போட்டுட்டுப் போவார். `எனக்கு ஒரு கையொப்பம்... ஆனா, அவங்களுக்கு அது வாழ்நாள் பொக்கிஷம்'னு சொல்லுவார்.

தோனி எனக்கு நல்ல நண்பர். டீம்ல இருந்த 3 வருஷமும் அவர் என்னோட ரூம்லதான் இருப்பார். தினமும் நானும் அவரும்தான் டின்னர் சாப்பிடுவோம். எப்பவும் ஐபேட்ல கேம்ஸ் ஆடிட்டே இருப்பார். எல்லா கேம்ஸுமே மிலிட்டரி கேம்ஸாதான் இருக்கும். யாரையாவது சேவ் பண்றமாதிரி, ஒரு ஊரையே காப்பாத்துற மாதிரியான விளையாட்டுகள்தான் விளையாடுவார். தோனி மாதிரியான ஒரு கிரிக்கெட்டரை, ஒரு மனிதரைப் பார்க்கமுடியாது!''