Published:Updated:

பியுஷ் சால்வாவுக்கு வாய்ப்பளித்தது ஏன்? - தோனி

புதுடெல்லி, மார்ச் 10,2011

உறுதியான மனநிலையைப் பெற வேண்டும் என்பதற்காகவே, சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லாவுக்கு நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வாய்ப்பளித்ததாக கேப்டன் தோனி கூறினார். ##~~##  

உலகக் கோப்பையில் இந்திய பேட்டிங் வரிசை வலுவான நிலையில் இருந்தபோதிலும், பந்துவீச்சு பலவீனமாக உள்ளது என்பது விமர்சகர்களின் கருத்து.

அதேபோல், பியுஷ் சாவ்லாவுக்கு பதிலாக அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படாதது தொடர்பாகவும் சர்ச்சை நிலவுகிறது.

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட, சற்றே தடுமாற்றம் கண்ட பிறகுதான் வெற்றி பெற்றது இந்திய அணி.

இதனை ஒப்புக் கொண்ட கேப்டன் தோனி, பியுஷ் சாவ்லா நெருக்கடியில் தான் இருக்கிறார். அவரது மன உறுதி நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார்.

இந்திய அணிக்கு ஒரு லெக் ஸ்பின்னர் அவசியம் என்ற அடிப்படையிலேயே பியுஷ் சாவ்லாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், கடந்த சில போட்டிகளில் அவரது பந்துவீச்சை எதிரணி ரன்குவிப்புக்கு பயன்படுத்துவதுடன் விக்கெட்டையும் இழக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் கூட கணிசமான ரன்களை வழங்கிய பிறகே அவரால் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு