Published:Updated:

`ஆட்டம் காட்டிய லிட்டன் தாஸ்; விட்டுக்கொடுக்காத குல்தீப் யாதவ்' - இந்தியாவுக்கு 223 ரன்கள் இலக்கு!

`ஆட்டம் காட்டிய லிட்டன் தாஸ்; விட்டுக்கொடுக்காத குல்தீப் யாதவ்' - இந்தியாவுக்கு 223 ரன்கள் இலக்கு!
`ஆட்டம் காட்டிய லிட்டன் தாஸ்; விட்டுக்கொடுக்காத குல்தீப் யாதவ்' - இந்தியாவுக்கு 223 ரன்கள் இலக்கு!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு 223 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்கதேசம்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா, பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன்தாஸ் மற்றும் ஹசன் களமிறங்கினர். பொறுமையாக ஆடிய இந்தக் கூட்டணி, சீரான வேகத்தில் ரன்குவிப்பில் ஈடுபட்டது. 120 ரன்கள் வரை இழுத்துச்சென்று, இந்திய அணிக்கு பெரும் சவாலாக திகழ்ந்த இந்தக் கூட்டணியை 21 ஓவரில் கேதர் ஜாதவ் பிரித்தார்.

இதன் மூலம் வங்கதேசம் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்களை எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய இம்ருல் கெய்ஸ் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து முஷ்பிகுர் ரஹீமை டார்கெட் செய்த கேதர் ஜாதவ் 5 ரன்னில் அவரை வெளியேற்றினார். ஆனால், லிட்டன் தாஸ் நகர்ந்தபாடில்லை. அதையடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைக்கவில்லை. இதனிடையே சதத்தை நிறைவு செய்து 121 ரன்களை எடுத்திருந்த லிட்டன் தாஸை, குல்தீப் பந்து வீச்சில் தோனி ரன் அவுட் செய்து வெளியேற்றினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற சவுமியா சர்கார் மட்டும் 32 ரன்களைக் குவித்தார். வங்க தேசம் 48.3 ஓவரில்  222 ரன்களை எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சிறப்பாக  பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.