Published:Updated:

`வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதைச் செய்யுங்கள்!' - தோனிக்கு கவாஸ்கரின் அட்வைஸ்

`வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதைச் செய்யுங்கள்!' - தோனிக்கு கவாஸ்கரின் அட்வைஸ்
`வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இதைச் செய்யுங்கள்!' - தோனிக்கு கவாஸ்கரின் அட்வைஸ்

'உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்' என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். 

Photo Credit: ICC

ஐபிஎல் தொடருக்குப் பின்னர், தோனி விளையாடியுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அவரது பேட்டிங் சிறப்பானதாக அமையவில்லை. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய 16 போட்டிகளில் விளையாடிய தோனி, 75.83 சராசரியுடன் 455 ரன்கள் குவித்திருந்தார். இந்த ஃபார்மை சர்வதேசப் போட்டிகளில் தோனி தொடருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நடப்பு ஆண்டில் அவர் விளையாடியுள்ள 9 சர்வதேச ஒருநாள் போட்டிகளில், அவர் 189 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

இந்த நிலையில், ஆட்டத் திறனை மேம்படுத்திக்கொள்ள தோனி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம்செலுத்த வேண்டும் என முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இந்தியா டுடே'விடம் பேசிய கவாஸ்கர், ``ஜார்க்கண்ட் அணியுடனான பயணத்தை அவர் தொடர்கிறார் என்று எனக்குத் தெரியும். அந்த அணியின் மென்டாராகவும் இருந்து அவர்களை தோனி வழிநடத்துகிறார். இருப்பினும், அவர்களுடன் இணைந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது தோனியின் ஆட்டத் திறனை மேம்படுத்துவதுடன், இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் செயலாகவும் இருக்கும். 

ஒருநாள் போட்டிகளில் உங்களுக்குக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கும். அதேநேரம், ரஞ்சிக் கோப்பை போன்று 4 நாள்கள் நடக்கும் போட்டியில் விளையாடுவதன் மூலம், ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான நல்ல ஃபார்மையும் பெற முடியும். இதனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.