Published:Updated:

ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸுக்கு 3வது வெற்றி

ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸுக்கு 3வது வெற்றி
ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸுக்கு 3வது வெற்றி
ஐ.பி.எல்: மும்பை இந்தியன்ஸுக்கு 3வது வெற்றி

மும்பை : மும்பையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 15வது லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 3வது வெற்றியை பதிவு செய்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் ரிக்கிபாண்டிங்கும், சச்சினும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

அணிக்கு வலுவான தொடக்கம் தந்த இந்த ஜோடி 7.1 ஓவரில் 54 ரன்கள் எடுத்தது. பாண்டிங் 14 ரன் எடுத்திருந்தபோது யுவராஜ் சிங்கின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதே போல் சிக்சர் அடிக்க முயற்சித்த சச்சின் (44) கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும், ரோகித் ஷர்மாவும் கைகோர்த்தனர். முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் மட்டும் எடுத்திருந்த மும்பை அணி, பிற்பாதியில்தான் புனேயின் பந்து வீச்சாளர்களை வதைத்தது. தினேஷ் கார்த்திக் 41 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து ரோகித் ஷர்மாவும், பொல்லார்ட்டும் இணைந்து இறுதி கட்டத்தில் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். குறிப்பாக ரோகித் ஷர்மா, திண்டாவின் இரு ஓவர்களில் மட்டும் 4 முறை பந்தை சிக்சருக்கு தூக்கியடித்தார். தான் எதிர்கொண்ட முதல் 17 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்த ரோகித் ஷர்மா, அடுத்த 15 பந்துகளில் 47 ரன்கள் சேகரித்து அமர்க்களப்படுத்தினார்.

##~~##
முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 62 ரன்களுடனும், பொல்லார்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 65 ரன்களை குவித்தது.
184 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய புனே அணி முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தது. மிட்செல் ஜான்சன், வீசிய பந்தில் ஆரோன் பிஞ்ச் போல்ட் ஆனார். பின்னர் வந்த  ராஸ் டெய்லர் (4 ),  உத்தப்பா (7) அடுத்தடுத்து நடையை கட்டினர். சரிவில் இருந்து புனே அணியால் நிமிரவே முடியவில்லை.
20 ஓவர்களில் புனே அணியால் 8 விக்கெட்டுக்கு 142 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 38 ரன்களும், யுவராஜ்சிங் 24 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
4வது லீக்கில் ஆடிய மும்பை அணிக்கு இது 3வது வெற்றியாகும். ஏற்கனவே சென்னை, டெல்லி அணிகளையும் தோற்கடித்து இருந்தது. அதே சமயம் 4-வது ஆட்டத்தில் விளையாடிய புனே அணிக்கு இது 3வது தோல்வியாகும்.