Published:Updated:

‘எல்லாம் விதி; எதுவும் என் கையில் இல்லை’ - கேப்டனாக 200வது போட்டி குறித்து தோனி #MSDhoni

‘எல்லாம் விதி; எதுவும் என் கையில் இல்லை’ - கேப்டனாக 200வது போட்டி குறித்து தோனி #MSDhoni
‘எல்லாம் விதி; எதுவும் என் கையில் இல்லை’ - கேப்டனாக 200வது போட்டி குறித்து தோனி #MSDhoni

கேப்டனாக 200வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவது குறித்த கேள்விக்கு, `இவை அனைத்தும் விதி, அதில் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு’’ என தோனி தெரிவித்துள்ளார். 

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் ரோஹித் ஷர்மா, துணை கேப்டன் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் இந்திய அணி, மகேந்திரசிங் தோனி தலைமையில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் தோனி கேப்டனாக பொறுப்பேற்கும் 200-வது போட்டி இதுவாகும். 

இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டாஸ் போட்டு முடித்த பிறகு பேசிய தோனி, ``இந்தப் போட்டியில் இந்த அணி முதலில் பந்து வீச உள்ளது. புவனேஷ்வர், பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் விளையாடாத அனைவருக்கும் இன்று விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 15 பேரில் ஒருவராக இருந்தவர்கள். நான் தற்போது எங்கு நிற்கிறேன் என எனக்கே தெரியவில்லை. நான் இதுவரை 199 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளேன். இவை எனக்கு 200-வது போட்டியில் கேப்டனாகும் வாய்ப்பைத் தந்திருக்கிறது. இது அனைத்தும் விதி. அவற்றில் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு. நான் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது, என் கையில் எதுவும் இல்லை. 200-வது போட்டியில் கேப்டனாக விளையாடுவது மகிழ்ச்சி ஆனால், இது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. முன்பு 199 போட்டிகளில் கேப்டனாக இருந்தேன். தற்போது 200 அவ்வளவுதான்” எனப் பேசினார்.