Published:Updated:

விராட்கோலி, கங்குலிக்கு அடுத்த இடத்தில் ரோஹித் ஷர்மா - 7ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை!

கலிலுல்லா.ச
விராட்கோலி, கங்குலிக்கு அடுத்த இடத்தில் ரோஹித் ஷர்மா - 7ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை!
விராட்கோலி, கங்குலிக்கு அடுத்த இடத்தில் ரோஹித் ஷர்மா - 7ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை!

ஒருநாள் போட்டிகளில், அதிவேகமாக 7ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார், ரோஹித் ஷர்மா.

ஐக்கிய அமீரகத்தில், ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்றைய சூப்பர் ஃபோர் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. 50 ஓவர்களில் 7விக்கெட்டுகளை இழந்து 237ரன்களைக் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான், ரோஹித் ஷர்மா  தம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டுபேரும் சதம் அடித்து, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

இந்த நிலையில், ரோஹித் ஷர்மா நேற்று வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தின்மூலம், அவர் ஒருநாள் போட்டிகளில் 7ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். மொத்தம் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், அதிவேகமாக 7ஆயிரம் ரன்களைக் கடந்த 3-வது வீரர்  என்ற பெருமையை அடைந்துள்ளார். இதனிடையே, கேப்டன் விராட் கோலி 161 போட்டிகளிலும், முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி 174 போட்டிகளிலும் 7 ரன்களைக் குவித்து, முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.