Published:Updated:

`ஜடேஜாவின் அசத்தல் கம்பேக்!’ - 173 ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம் #IndvsBan

`ஜடேஜாவின் அசத்தல் கம்பேக்!’ - 173 ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம் #IndvsBan
`ஜடேஜாவின் அசத்தல் கம்பேக்!’ - 173 ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம் #IndvsBan

இந்திய அணிக்கெதிரான ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றுப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி, 49.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 

Photo Credit: ICC

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் ஃபோர் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்தச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.

அதன்படி வங்கதேசம் ஆட்டத்தைத் தொடர்ந்தது. லிட்டன் தாஸ் மற்றும் நஸ்முல் ஹுசைன் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்த ஓவர்களில் வெளியேறினர். 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில்,  ஷகிப் உல் ஹுசைன் மற்றும் ரஹீம் ஜோடி இணைந்தனர். வங்கதேச அணியின் அனுபவம் வாய்ந்த இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது பந்துவீச்சில் ஷகிப் 17 ரன்களில் வெளியேறினார். வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, அந்த அணி 33.2 ஓவர்களில் 101 ரன்களுக்கு 7விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து மெஹிடி ஹசன் - கேப்டன் மொர்டாசா ஜோடி 8-வது விக்கெட்டுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி, 8-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. மொர்டசா 26 ரன்களும், ஹசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 49.1 ஓவர்களில் வங்கதேச அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.