Published:Updated:

ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு! - வங்கதேசத்துக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வுசெய்த இந்தியா

ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு! - வங்கதேசத்துக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வுசெய்த இந்தியா
ரவீந்திர ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு! - வங்கதேசத்துக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வுசெய்த இந்தியா

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் முதல் போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தது. 

Photo Credit: BCCI

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் ஃபோர் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்தச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஹாங்காங்கையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியிருந்தது. ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கையைத் தோற்கடித்த வங்கதேசம், இளம் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியிருந்தது.