Published:Updated:

இனி இந்தியா vs வங்கதேசம்தான் ரைவல்ரியின் உச்சமா?! #IndVsBan

இனி இந்தியா vs வங்கதேசம்தான் ரைவல்ரியின் உச்சமா?! #IndVsBan
இனி இந்தியா vs வங்கதேசம்தான் ரைவல்ரியின் உச்சமா?! #IndVsBan

ஆசியக் கோப்பையில் இந்தமுறை இந்தியாவுக்கு டஃப் ஃபைட் கொடுக்கப்போவது ஆப்கானிஸ்தானும், பங்களாதேஷும்தான் என்று தோன்றுகிறது. முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும் ஆப்கானிஸ்தான் கொடுத்த அடியை வங்கதேசம் மறக்காது. இலங்கையை வீழ்த்திய அணி என்பதல்ல வங்கதேச அணிக்கான பெருமை. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியையே அசைத்துப் பார்க்கக்கூடிய அணி என்பதுதான் வங்கதேசத்தின் அடையாளம். அதனால் இன்று வங்கதேசத்திடம் கூடுதல் கவனத்துடன்தான் இந்தியா விளையாடவேண்டும். அதுவும் இந்தியா பாகிஸ்தான் ரைவல்ரியைவிட இந்தியா Vs வங்கதேசம் ரைவல்ரி உச்சம் பெறத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. #IndVsBan

90-களின் இறுதியில் இந்தியாவை வீழ்த்துவதை மிகப்பெரிய வெற்றியாக இலங்கை கருதியதைப்போல, இப்போது இந்தியாவை வீழ்த்துவதை மிகப்பெரிய கொண்டாட்டமாகப் பார்க்கிறது வங்கதேசம். 2012 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் மோதிய ஆட்டத்தில்தான் சச்சின் தனது 100-வது சதத்தை அடித்தார். ஆனால், சச்சினின் அந்த எமோஷனல் மொமன்ட்டை எல்லாம் சேஸிங்கில் சிதறடித்தது வங்கதேசம். இந்தியாவின் 289 ரன்களை சேஸ் செய்து முடித்தது வங்கதேசம். அப்போதிலிருந்தே இந்தியா வெர்ஸஸ் வங்கதேசம் என்றாலே இந்தியா வெர்ஸஸ் பாகிஸ்தான் ஃபீல் வர ஆரம்பித்துவிட்டது.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவை வங்கதேசம் வென்றதில்லை என்பதுதான் வரலாறு. இந்த 3 ஆண்டுகளில் இரண்டு அணிகளும் 1 டெஸ்ட், 2 ஒருநாள், 6 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. எதிலுமே வங்கதேசம் வென்றதில்லை என்றாலும் எந்த வெற்றியையுமே இந்தியா எளிதில் பெறவில்லை என்பதுதான் உண்மை. 2016 வேல்ர்டு டி20 போட்டியில் கிட்டத்தட்ட வெற்றியைக் கொண்டாடிவிடுவார் முஷ்ஃபிகர். ஆனால், ஆட்டம் தலைகீழாக மாறிவிடும். 1 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் இந்தியாவிடம் தோற்கும். 

அதேபோல, கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டிராபி இறுதிப்போட்டியிலும் கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் வெளுக்கவில்லை என்றால், இந்தியாவின் நிலை அவமானகரமாகியிருக்கும். இந்த உஷ்ண நிலையில்தான் இன்று இந்தியாவும்- வங்கதேசமும் மோத இருக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முக்கிய ப்ளேயர்களை ரெஸ்ட்டில் விட்டது வங்கதேசம்!

இந்தியாவின் ப்ளேயிங் லெவன்!
காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா, ஷ்ரதுல் தாக்குர், அக்ஸார் பட்டேல் என மூவரை இழந்திருக்கிறது இந்தியா. ஆனால், ஹர்திக் பாண்டியா தவிர மற்ற இருவரும் ப்ளேயிங் லெவனில் இல்லாதவர்கள் என்பதால் ரோஹித் ஷர்மா அதிகம் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. இன்று ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக யார் அணிக்குள் வருவார்கள் என்பதுதான் கேள்வி. பாண்டியாவுக்கு பதிலாக ஹாங் காங் போட்டியில் சிறப்பாக விளையாடிய கலீல் அஹமது இந்திய அணிக்குள் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். அதேபோல் முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் விளையாடாத கேஎல் ராகுல் இந்தப் போட்டியில் அணிக்குள் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. கேஎல் ராகுலின் வருகை தினேஷ் கார்த்திக்கின் இடத்தைக் காலி செய்யலாம். 


ரோஹித் - தவான், ராகுல்- அம்பதி ராயுடு, தோனி - கேதர் ஜாதவ் இதுதான் இந்தியாவின் பேட்டிங் ஆர்டராக இருக்கும். கலீல்- புவனேஷ்வர் குமார்- ஜஸ்பிரித் பும்ரா மூவரும் வேகப்பந்து வீச்சாளர்களாகவும், சாஹல்- குல்தீப் ஸ்பின்னர்களாகவும் அணிக்குள் இருப்பார்கள். 
இந்தியாவின் பேட்டிங்தான் பலம். இரண்டு மேட்சுகளாக பெரிய இன்னிங்ஸ் ஆடாத ரோஹித் ஷர்மா இன்று ஃபார்முக்கு வந்தால் இந்தியாவின் ஸ்கோர் 300-ஐத் தாண்டலாம். 

என்ன செய்யப்போகிறது வங்கதேசம்?!
ஸ்டார் பேட்ஸ்மேன் முஷ்ஃபிகர், ஸ்ட்ரைக் பெளலர் முஸ்டஃபைஸூர் இருவரையும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரெஸ்ட் கொடுத்திருந்தது வங்கதேசம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இருவரும்தான் ஸ்டார்களாக இருப்பார்கள் என்று நம்புகிறது வங்கதேச அணி. வங்கதேசத்தின் ஸ்பின்னர்கள் சரியாக விக்கெட்டுகளை இதுவரை எடுக்கவில்லை என்பது அந்த அணியின் பலவீனம்.

பிட்ச்!
துபாயில் 40 டிகிரிக்கும் மேல் வெயில் இருப்பதால் வெப்பம் தகிக்கிறது. மாலைக்கு மேல் புழுக்கம் அதிகம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுக்கும். இந்த பிட்ச்சில் என்பதைவிட இந்த வெப்பச் சூழலில் சேஸ் செய்வது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், இரண்டு அணிகளுமே இன்றைய போட்டியில் தோல்வியடைவதை அவமானமாகக் கருதுவதால் பரபரப்பான ஆட்டம் காத்திருக்கிறது!