Published:Updated:

ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறினார் ஹர்திக் பாண்ட்யா!

ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறினார் ஹர்திக் பாண்ட்யா!
ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறினார் ஹர்திக் பாண்ட்யா!

காயம் காரணமாக, ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா வெளியேறியுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில், லீக் சுற்றுப்போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் 21-ம் தேதி, வங்கதேச அணியை இந்தியா எதிர்கொள்கிறது. முன்னதாக நேற்று நடந்த போட்டியில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டனர்.  இந்திய அணி பந்துவீச்சின்போது, 18-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா திடீரென ஏற்பட்ட முதுகு வலியால் மைதானத்தில் அப்படியே சுருண்டு விழுந்தார். தொடர்ந்து வலியால் துடித்த அவரால் எழுந்திருக்க முடியாததால், ஸ்ட்ரெட்சர் மூலம் மைதானத்திலிருந்து  கொண்டுசெல்லப்பட்டார். பின்னர், அவருக்குப் பதிலாக மணிஷ் பாண்டே ஃபீல்டிங் செய்தார். 

தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதால், பாண்ட்யா தற்போது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது,  விரலில் காயம் ஏற்பட்டதால் அக்சர் படேலும், ஹாங்காங் போட்டியின்போது காயம் அடைந்த ஷர்துல் தாக்கூரும் அணியில் இருந்து விலகியுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவும், சித்தார்த் கவுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் இன்று அணியுடன் இணைவார்கள் என பிசிசிஐ கூறியுள்ளது.