Published:Updated:

இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி! - பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் #IndvsPak

இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி! - பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் #IndvsPak
இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி! - பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் #IndvsPak

ஆசியக் கோப்பை லீக்கில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Photo Creidt: BCCI

கடந்த ஆண்டு (2017) நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் கடைசியாக எதிர்கொண்டன. அதன் பின்னர், இன்றுதான் துபாயில் நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. இரண்டு அணிகளும் தங்களது முதலாவது ஆட்டத்தில் ஹாங்காங் அணியை வெற்றிகொண்டு அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. எனினும், பாகிஸ்தான் ஹாங்காங் அணியை எளிதில் வீழ்த்தியது. இந்திய அணியோ சற்று போராட்டத்துக்குப் பின்னர்தான் வீழ்த்தியது. 

கடந்த ஓராண்டில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சிறப்பாகவுள்ளது. பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் அந்த அணியிடம் இந்த பேட்ஸ்மேன்கள் சற்று கவனத்துடன் இருப்பது அவசியம். இந்தியா - ஹாங்காங் அணிகள் மோதிய அதே துபாய் மைதானத்தில்தான் நடைபெறவுள்ளது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கலீல் அகமது மற்றும் ஷ்ரதுல் தாக்கூர் ஆகியோருக்குப் பதிலாக ஹர்டிக் பாண்ட்யா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.