Published:Updated:

`மிடில் ஆர்டர் சொதப்பல்’ - ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா!

`மிடில் ஆர்டர் சொதப்பல்’ - ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா!
`மிடில் ஆர்டர் சொதப்பல்’ - ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

`மிடில் ஆர்டர் சொதப்பல்’ - ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா!

14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா - தவான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு, தவானுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணியில் இடம் கிடைத்திருப்பதால் அம்பத்தி ராயுடு அவசரம் காட்டாமல் பொறுமையாக விளையாடினார். தவான் - அம்பத்தி ராயுடு இணை மேற்கொண்டு விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். அணியின் ஸ்கோர் 161 ரன்கள் எட்டியபோது அம்பத்தி ராயுடு அவுட் ஆகி வெளியேறினார். அவர் 70 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்திருந்தார்.

`மிடில் ஆர்டர் சொதப்பல்’ - ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா!

மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஷிகர் தவான் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். 40.4 ஓவர்களில் இந்திய அணி 240 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவான் அவுட்- ஆகி வெளியேறினார். இந்திய அணி 300 ரன்களைக் கடக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி வெளியேறியதால் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 127 ரன்களும், அம்பத்தி ராயுடு 60 ரன்களும் எடுத்தனர். 

இதனையடுத்து, 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. கத்துக்குட்டியான ஹாங்காங்கை இந்திய அணி எளிதில் வீழ்த்திவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடக்க ஜோடியைப் பிரிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது.

`மிடில் ஆர்டர் சொதப்பல்’ - ஹாங்காங்கை போராடி வென்றது இந்தியா!

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய நிசாகத் கான் மற்றும் அன்சுமன் ராத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் ஆடிய விதத்தைப் பார்த்தபோது விக்கெட் இழப்பின்றி ஹாங்காங் வெற்றி பெற்று விடும் என எண்ணத் தோன்றியது. ஒருவழியாக குல்தீப் ஓவரில் அன்சுமன் ராத் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு அந்த இணை 174 ரன்கள் குவித்தது. அன்சுமன் ராத் 97 பந்துகளில் 73 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் நிசாகத் கான் அச்சுறுத்திக்கொண்டிருந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிசாகத் கான், இந்திய வீரர் கலில் அகமத் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதன்பின்னர் இந்தியாவின் கை ஓங்கியது. இருப்பினும் ஹாங்காங் வீரர்கள் வெற்றிக்காகப் போராடினர். 50 ஒவர் முடிவில் அந்த அணியால் 259 ரன்களே எடுக்க முடிந்தது. இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் கலீல் அகமது, சாஹல் தலா 3 விக்கெட்டுக்களும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.